பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,27: பெட்ரோல், டீசல் விலையில் 24வது நாளாக இன்றும் மாற்றமில்லை

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 24 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை



சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 24 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.



latest tamil news


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, இரண்டும் லிட்டருக்கு தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர்.


latest tamil news



தமிழகத்தில் இம்மாதம் 3ம் தேதி லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய்க்கும்; டீசல் 102.59 ரூபாய்க்கும் விற்பனையானது. அடுத்த நாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய அரசு, 3ம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதனால், 4ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது.

அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும்; டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாயின. இன்று வரை 24 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் உள்ளது. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selva - Chennai,இந்தியா
27-நவ-202118:44:40 IST Report Abuse
selva ..எல்லாம் ரைட்..
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
27-நவ-202111:35:05 IST Report Abuse
K.n. Dhasarathan ஏன் இந்த 24 நாளாக சர்வதேச சந்தையில் கச்ச என்னை விலையில் மாற்றம் ஏதும் இல்லையா ?, மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் , ஒரு நாள் தூக்கி எறிவார்கள் , அப்போது எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது, இப்போது காங்கிரஸ் அனுபவிப்பது போல.
Rate this:
Cancel
Just imagine - chennai,சீனா
27-நவ-202110:18:53 IST Report Abuse
Just imagine This month oil price down about 20% from $85/barrel to $68/barrel now , (if price s at this level ) …..Hope Govt and oil companies reduce the price further down in coming days .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X