பொது செய்தி

தமிழ்நாடு

நடப்பாண்டு வணிக வரி வசூல் ரூ.56,295 கோடி..

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை--''வணிக வரித் துறையில் நடப்பு ஆண்டில், 56 ஆயிரத்து 295 கோடி ரூபாய் வரி வசூலாகி உள்ளது,'' என்று வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.சென்னை நந்தனத்தில் உள்ள வணிக வரி வளாகத்தில், வணிக வரித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், வணிக வரித்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி, வணிக வரி கமிஷனர் சித்திக் மற்றும்

சென்னை--''வணிக வரித் துறையில் நடப்பு ஆண்டில், 56 ஆயிரத்து 295 கோடி ரூபாய் வரி வசூலாகி உள்ளது,'' என்று வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.



latest tamil news



சென்னை நந்தனத்தில் உள்ள வணிக வரி வளாகத்தில், வணிக வரித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், வணிக வரித்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி, வணிக வரி கமிஷனர் சித்திக் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


latest tamil news


ஆய்வுக்கு பின் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:ஜி.எஸ்.டி., வரியின் கீழ், நடப்பு ஆண்டில் அக்டோபர் வரை 56 ஆயிரத்து 295 கோடி ரூபாய் வரி வசூலாகி உள்ளது. இது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 26 சதவீதம் அதிகம்.வணிகர்களின் குறைகளை களைய, ஜூலையில் புகார் பிரிவு துவங்கப்பட்டது. இவற்றில் தற்போது வரை, 759 புகார்கள் பதிவாகின; இதில், 638 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரோந்து வாகனங்கள் செய்த தணிக்கையில், வரி மற்றும் அபராதமாக, மூன்று மாதங்களில் 17.64 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்து, 25.99 கோடி ரூபாய் வரி மற்றும் அபராதம் வசூலித்துள்ளனர்.ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள், நீர் வழித்தட இடங்கள் ஆகியவற்றை, பத்திரப் பதிவு செய்தவர்கள்மீது, நீதிமன்றத்திற்கு செல்லாமல், துறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர, முயற்சிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
27-நவ-202112:13:03 IST Report Abuse
Sampath Kumar வசூல் மன்னன் ஆட்சில் இது எல்லாம் சாதாரணமப்பா
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
27-நவ-202109:28:41 IST Report Abuse
Sampath Kumar வணிக வரி ? இதுல னிடும் குறைச்சல் இல்ல இனி ஒண்ணுக்கு போன வரி இரணிக்கு போன வரி ன் ஏள்ளதையும் சேர்த்து கொள்ளவும் அப்போ வரி கோல்லேச்டின் விண்ணை தொடும் .பீத்திக்கொள்ளலாம்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-நவ-202109:12:25 IST Report Abuse
RajanRajan இன்னாது எல்லோரும் ஏப்பம் விட்டப்புறமும் இம்புட்டு 56 ஆயிரம் கோடிகள் வணிகத்துறை வருமானமோ. அப்புறம் ஏன் பெட்ரோல் டீசல் வரி குறைப்பு இல்லை. ஏம்பா ஆட்டைய போடுறதுக்கு இம்புட்டு பத்துமா என்ன அதனாலே தானே உலக வங்கிலே கடன் வாங்க போவுறோம் விடியலுக்காக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X