எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

டெங்கு பரவுது! மழை நீர் தேக்கத்தால் சுகாதார சீர்கேடு; தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக்கணும்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை தேங்கிய இடங்களில் சுகாதார வசதி மேற்கொண்டு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை இன்னும் முடிவடையாத நிலை உள்ளது. வடகிழக்கு
டெங்கு பரவுது! மழை நீர் தேக்கத்தால் சுகாதார சீர்கேடு; தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக்கணும்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை தேங்கிய இடங்களில் சுகாதார வசதி மேற்கொண்டு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை இன்னும் முடிவடையாத நிலை உள்ளது. வடகிழக்கு பருவமழையால் தொற்று நோய் பல பரவும் சூழல் இருக்கிறது.இந்நிலையில், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையினர், தலைச்சுற்றலில் இருக்கின்றனர்.


அறிவுறுத்தல்


டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை பல இடங்களில் தேங்கியுள்ள நிலையில், அங்கு சுகாதார பாதிப்புகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 160 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது.இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட சுகாதாரத் துறையினர், 14 ஒன்றியங்களில், தலா 40 பேர் வீதம், கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமித்து உள்ளனர்.

இதே போல், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகள் என, மொத்தம், 1,500 கொசு ஒழிப்பு பணியாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, வீடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மாவட்ட சுகாதாரத் துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் இதுவரை, 160 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும், 'ஏடிஸ்' கொசு ஒழிப்பு பணியில், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் ஏற்படும் பகுதியில், குழுவாக ஊழியர்கள் சென்று, பிளீச்சிங் பவுடர் தெளித்து, தேவையற்ற பொருட்களில், மழை நீர் தேங்குவதை தவிர்க்க, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தனியாக வார்டுகள்


செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, சதுரங்கப்பட்டினம், ஊரப்பாக்கம், பல்லாவரம், புனிததோமையார்மலை ஆகிய பகுதிகளில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து, டெங்கு காய்ச்சல்பாதிப்பு இருந்து வருகிறது.மாவட்டத்தில் இதுவரை, 112 பேருக்கு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, வீடு திரும்பி உள்ளனர். மேற்கண்ட பகுதிகளில் தினமும் மூன்று பேருக்கு, டெங்கு காய்ச்சல் பாதிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் வருவோருக்கு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனியாக வார்டுகள் எற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மெக்கானிக் கடைக்கு அபராதம்


திருவள்ளூர் நகராட்சி, ஜே.என்.சாலை, லட்சுமிபுரம் பகுதியில், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜூ மற்றும் அலுவலர்கள் முன்னிலையில், வீடு, வீடாக சென்று, ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பொதுமக்களிடம், தேவையற்ற பாத்திரங்கள், தேங்காய் ஓடுகளில் தண்ணீர் தேங்காமல் இருக்குமாறு, அறிவுரை வழங்கினார். அதை தொடர்ந்து, தனியார் வாகன பழுது நீக்கும் கடையில் இருந்த டயர் மற்றும் பாத்திரங்களில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக, அக்கடை உரிமையாளருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான ரசீது வழங்கினார்.


இதுவரை ஒதுக்கப்படவில்லை


காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஜனவரி முதல் நவம்பர் 25 வரை, 59 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 57 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று, பயன்பாட்டில் இல்லாத தேங்காய் ஓடு, மண்சட்டி, டயர், உரல், டீ கப் போன்ற பொருட்களில் மழை நீர் தேங்கி இருக்கிறதா என, ஆய்வு செய்து வருகின்றனர். அந்தந்த பகுதிகளில், கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 11 மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லாததால், தனி வார்டு எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை.இத்தகவலை காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X