பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் பண்டிட்களுக்காக செய்ய வேண்டியவை என்ன? சுரீந்தர் கவுல் இன்று பேசுகிறார்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப செய்ய வேண்டியவை குறித்து, அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவ நிபுணர் டாக்டர் சுரீந்தர் கவுல் இன்று(நவ.,27) சிறப்புரை ஆற்றுகிறார்.ஜம்மு காஷ்மீரில் பல நுாறு ஆண்டுகளாக வசித்த பண்டிட் சமூகத்தினர், பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கிருந்து வெளியேறி, டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் அகதிகளாக வசிக்கின்றனர். பலர்
Kashmiri Pandits, Kashmir,காஷ்மீர்

காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப செய்ய வேண்டியவை குறித்து, அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவ நிபுணர் டாக்டர் சுரீந்தர் கவுல் இன்று(நவ.,27) சிறப்புரை ஆற்றுகிறார்.

ஜம்மு காஷ்மீரில் பல நுாறு ஆண்டுகளாக வசித்த பண்டிட் சமூகத்தினர், பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கிருந்து வெளியேறி, டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் அகதிகளாக வசிக்கின்றனர். பலர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். அவர்களை, மீண்டும் சொந்த மாநிலத்தில் மறு குடியேற்றம் செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news


அதன் ஒரு பகுதியாக, காஷ்மீர் கலாசார பாரம்பரியம் 16வது விழிப்புணர்வு தொடர் உரை நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாத்யம தர்ம சமாஜம் மற்றும் காஞ்சி காமகோடி சேவா பவுண்டேஷன் - அமெரிக்கா ஆகிய அமைப்பினர் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். இதில், 'காஷ்மீர் பண்டிட்டுகள் சொந்த மாநிலம் திரும்ப செய்ய வேண்டியவை என்ன' என்ற தலைப்பில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் டாக்டர் சுரீந்தர் கவுல் சிறப்புரையாற்றுகிறார்.


latest tamil news


இன்று சனிக்கிழமை இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. டாக்டர் சுரீந்தர் கவுல் உரையை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், மாத்யம தர்ம சமாஜம் ஆகியவற்றின் 'யு டியூப்' சேனல்களில் காணலாம்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
27-நவ-202120:02:46 IST Report Abuse
sankaseshan கவுல் பிராமண பண்டிட் ஏன் வாய் திறக்கவில்லை? பார்த்தசாரதி பண்டிட்டுகள் கொல்லப்படுவது போலி பண்டிட் பெரோஸ் ராஜிவ் காலத்திலேயே தொடங்கி விட்டது நீ காங்கிரசின் கொத்தடிமையா?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
27-நவ-202119:23:37 IST Report Abuse
 Muruga Vel மஹாராஜா ஹரிசிங் பண்டிட்களுக்கு அரசாங்க வேலை தருவதாக அறிவித்தவுடன் தச்சு வேலை செய்பவர் முதல் அணைத்து தரப்பினரும் தங்களை பண்டிட் என்று மாற்றிக்கொண்டார்கள் ...எல்லா காஷ்மீர் இந்துக்களும் பண்டிட்கள். காஷ்மீரில் தீவிரவாதம் தொடங்கியதுமே பெரும்பாலான பண்டிட்கள் வேலை கல்வி குழந்தைகளின் எதிர்காலம் இவற்றை கருத்தில் கொண்டு டில்லி மும்பை ஐதராபாத் பெங்களூரு மற்றும் ஐரோப்பா அமேரிக்கா புலம் பெயர்ந்தார்கள் என்பது உண்மை ..விவசாயம் செய்து வாழ்க்கை நடத்திய இந்துக்களை மசூதிகளிலிருந்து ஒலிபெருக்கி மூலம் பயமுறுத்தி அவர்களின் நிலம் வீடு போன்றவைகளை கைப்பற்ற ஒரு கும்பல் முயற்சி செய்து வெற்றி அடைந்தது உண்மை ..
Rate this:
Venkatesan - Chennai,இந்தியா
27-நவ-202121:58:38 IST Report Abuse
Venkatesanஏன் இப்படி பசப்புகிறீர்கள்? பயமா? உண்மையை உரக்க சொல்லுங்கள். திராவிஷ கருத்து பாதி. நாம் யாரை சகோதரன் என்று அழைத்தோமோ அவன் தான் நம் வீடு பெண்கள் மேல் கைவைத்த கயவர்கள். மன்னிக்கவும் முடியாது... கண்டிப்பாக மறக்கவும் முடியாது....
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
28-நவ-202110:35:32 IST Report Abuse
 Muruga Velநாம் யாரை சகோதரன் என்று அழைத்தோமோ அவன் தான் நம் வீடு பெண்கள் மேல் கைவைத்த கயவர்கள்... இக்கரைக்கு அக்கறை பச்சை விவகாரத்தை இதில் எதுக்கு நுழைக்கிறீர்கள் ..நீங்க சொன்னது பெரிய இடங்களில் மாத்தி நடக்குது .....
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
27-நவ-202119:06:18 IST Report Abuse
Kumar தீவிரவாதம் என்பது உலகில் மதம் சார்ந்தது தான்.ஆகவே மத தீவிரவாதத்தை எதிர்ப்பது இந்தியாவின் கடமை.உலகிலேயே சொந்த நாட்டில் அகதிகளாக உள்ள மக்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்ற உண்மை உணர்ந்து கொள்ள வேண்டும்.ஆனால் இதைப்பற்றி பேசக்கூட இயலாத நிலையில் தான் நாம் இருக்கிறோம் என்பது வெட்கக்கேடு. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X