சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை-தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நவ., 1ல் துவக்கப்பட்டது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.வாக்காளர்கள் வசதிக்காக, 13, 14, 20, 21ம் தேதிகள் என நான்கு நாட்கள், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாம்களில் மொத்தம், 8.59 லட்சம்

சென்னை-தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நவ., 1ல் துவக்கப்பட்டது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.latest tamil news


வாக்காளர்கள் வசதிக்காக, 13, 14, 20, 21ம் தேதிகள் என நான்கு நாட்கள், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாம்களில் மொத்தம், 8.59 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. பெயர் சேர்க்க மட்டும், 61.41 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடைசியாக இன்றும்( நவ.,27), நாளையும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் வழங்கலாம்.


latest tamil news


இது தவிர, www.nvsp.in என்ற இணையதளத்திலும், VOTER HELPLINE என்ற மொபைல் ஆப் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
27-நவ-202109:24:46 IST Report Abuse
Chakkaravarthi Sk தமிழ்நாட்டின் தேர்தல் அதிகாரிகளுக்கு என்ன அவசரம்? மொத்த ஊரே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் பொழுது எப்படி வாக்காளர்கள் வந்து செல்ல முடியும்?
Rate this:
Cancel
Manicka selvi - Chennai,இந்தியா
27-நவ-202108:08:19 IST Report Abuse
Manicka selvi இன்று மூன்றாவது camp. தேர்தல் உண்டு என்பதால் மழையின் பொருட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது உண்மையே. வாக்கு சாவடியாக உள்ள பள்ளிகள் நீரில் பாதி மூழ்கி இருந்தாலும் camp நடைபெறும். நடப்பவை நன்றாகவே நடக்கட்டும். யாருக்கும் இதை கேட்க வேண்டும் .எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? ஒவ்வொரு இடத்திலும் அதிகாரிகள் இடம் மாறலாம். அதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்வதை ஏற்று கொள்வதா? பள்ளிகள் இப்போது தான் திறந்தது. பள்ளி நேரத்தில் ஆசிரியரை அழைத்து தேர்தல் பணிக்கு வாக்காளர் வீடுகளுக்கு அழைத்து செல்வது எவ்விதத்தில் நியாயம். CM செல்லிர்க்கு இந்த நிகழ்வை, கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். கொரோனா அச்சத்தில் சிறு குழந்தைகளை பெற்றோர்கள் அந்த வகுப்பு ஆசிரியர்களை நம்பியே அனுப்புகின்றனர். வகுப்பை விட்டு சென்ற ஆசிரியரை பெற்றோர் எவ்வாறு கேள்வி கேட்பர் என்பதை நான் சொல்லி தெரிவிக்க வேண்டியதில்லை. ஒன்றை மட்டும் கூறி முடிக்கிறேன். ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பது பழமொழி. இது நம் பணி மட்டுமன்று நம் கடமை என்று நம் ஆசிரியர்கள் பணி செய்து கொண்டிருக்கின்றனர். கேள்வி கேட்டால் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் கொண்டவர்களாக உள்ளனர் நம் ஆசிரியர்கள். அச்சம் தவிர் என்று மாணவர்களுக்கு மட்டும் போதிப்பவர்களாக இருக்க கூடாது. கேட்க வேண்டிய நேரத்தில் கேள்விகளை கேட்டே தீர வேண்டும். ஆசிரியைகள் அனைவரின் சார்பிலும் கேட்கிறேன்.
Rate this:
Cancel
Manicka selvi - Chennai,இந்தியா
27-நவ-202108:02:36 IST Report Abuse
Manicka selvi Kattayam ethu thevaiya erkanavey 2 varangal seithathu pothathu arasuku arivu ellaya entha mlai matrum corona samaythil ethai thavirkalam maraga online pathivu matum merkolalam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X