சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'அம்மா மினி கிளினிக்' பெயர் மாற்றம்; அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி

Added : நவ 27, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
மேட்டூர்:சேலம், நவப்பட்டி ஊராட்சியில், 'அம்மா மினி கிளினிக்' பெயரை மாற்றி தி.மு.க.,வினர் பெயர் பலகை வைத்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தமிழகம் முழுதும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில், அ.தி.மு.க., அரசு சார்பில், 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டன.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அம்மா மினி கிளினிக்

மேட்டூர்:சேலம், நவப்பட்டி ஊராட்சியில், 'அம்மா மினி கிளினிக்' பெயரை மாற்றி தி.மு.க.,வினர் பெயர் பலகை வைத்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



latest tamil news


தமிழகம் முழுதும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில், அ.தி.மு.க., அரசு சார்பில், 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டன.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களான நிலையில், நான்கு நாட்களுக்கு முன், நவப்பட்டி அம்மா மினி கிளினிக் முன்புறம் இருந்த பெயர் பலகை திடீரென மாற்றப்பட்டது. அப்பகுதி தி.மு.க.,வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், 'முதலமைச்சர் மினி கிளினிக்' என பெயர் பலகை வைத்துள்ளனர். இது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


latest tamil news



கொளத்துார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விமலா கூறுகையில், ''அரசு விதியை மீறி வைத்துள்ள பெயர் பலகையை அகற்றக் கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். இது குறித்து சுகாதாரத் துறைக்கும் அறிக்கை அனுப்பியுள்ளோம்,'' என்றார்.

நவப்பட்டி ஊராட்சி தலைவர் காளியம்மாள் கூறியதாவது:அ ம்மா மினி கிளினிக் பெயர் பலகையை மாற்றம் செய்து, ஊராட்சி அலுவலகம் முன் தி.மு.க.,வினர் பெயர் பலகை வைத்துள்ளனர். இதற்காக, ஊராட்சியில் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இது குறித்து, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஏற்கனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன், அம்மா உணவகங்கள் செயல்படும் நிலையில், மதுரையில் ஓர் உணவகத்தில் கருணாநிதி படமும் வைக்கப் பட்டது. இது சர்ச்சையானதும், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவர் படங்களுமே நீக்கப்பட்டன.

இந்நிலையில், சேலத்தில் அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டு, அதில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் நீக்கப்பட்டு, கருணாநிதி, ஸ்டாலின் படங்களுடன், முதலமைச்சர் கிளினிக் என எழுதப்பட்டுள்ளது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
28-நவ-202105:38:53 IST Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் ஆடுறது 'கண்ணாமூச்சி ஆட்டம் சீக்கிரமே மக்கள் அவுட் செஞ்சுருவாங்க
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
27-நவ-202120:34:01 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பெயர் மாற்றுவது அவசியம் இதன் மூலம் வெள்ளம் வடிந்துவிடும் மக்கள் துயர் நீங்கும்
Rate this:
Cancel
Rajaguruprasath - Atlanta,யூ.எஸ்.ஏ
27-நவ-202118:41:01 IST Report Abuse
Rajaguruprasath அது அம்மா கிளினிக், அய்யா கிளினிக் இல்ல . அரசு பொது மருத்துவமனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X