அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்புமணி தலைவரா; செயல் தலைவரா? பொதுக்குழுவில் நடக்கிறது ஓட்டெடுப்பு

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: பா.ம.க.,வை பலப்படுத்தும் வகையில், அக்கட்சியின் மாநில தலைவர் அல்லது செயல் தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பதவியை கணிசமாக கைப்பற்ற பா.ம.க., திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாநில, மாவட்ட
Anbumani, PMK, Anbumani Ramadoss, அன்புமணி ராமதாஸ், அன்புமணி, பாமக

சென்னை: பா.ம.க.,வை பலப்படுத்தும் வகையில், அக்கட்சியின் மாநில தலைவர் அல்லது செயல் தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பதவியை கணிசமாக கைப்பற்ற பா.ம.க., திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சந்தித்து, ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

வரும், '2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், பா.ம.க., 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்; அன்புமணியை முதல்வராக்க வேண்டும்' என்ற கோஷத்துடன், கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சும் வகையில், புதிய நிர்வாகிகளையும் ராமதாஸ் நியமித்து வருகிறார்.


latest tamil news



புதிய மாவட்ட செயலர்கள் பட்டியலில், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளதோடு, சமூக நீதியை பிரதிபலிக்கும் வகையில், மற்ற ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. குறிப்பாக, தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலர் பதவி, பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் அய்யருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநில, மாவட்ட, நகர, பேரூராட்சி, ஒன்றிய கிராமம் வாரியாக புதிய நிர்வாகிகளை நியமித்த பின், கட்சியின் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் அல்லது ஜனவரியில் நடத்தப்பட உள்ளது. அப்போது, சட்டசபை பா.ம.க., தலைவராக ஜி.கே.மணி இருப்பதால், அவர் வகிக்கும் மாநில தலைவர் பதவி, இளைஞரணி தலைவரான அன்புமணிக்கு வழங்கப்படுமா அல்லது செயல் தலைவர் பதவி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறுவதற்கு, ஓட்டெடுப்பு நடத்தி, அன்புமணிக்கு பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
28-நவ-202100:54:54 IST Report Abuse
Arachi நாட்டுக்கு ரொம்ப தேவையான கட்சி. வன்முறையில் பிறந்து வன்முறையில் வளர்ந்த கட்சி. பஸ் எரித்தது அதுவும் உயிரோட கல்லூரி மாணவிகளை எரித்தது பசுமையான மரங்களை வெட்டிசாய்த்தது ரயில் மறியல் சனநாயக தன்மையற்ற சாதி வெறி பிடித்த கட்சி. அடுத்த பின்தங்கிய சாதியின் இட ஒதுக்கீட்டிற்கு இடைஞ்சல் செய்வது மற்றவர்களைப்பற்றிக் கவலைப்படாதது இந்த கட்சி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன.கட்சியை தடைசெய்வதற்கு எல்லா தகுதியும் உள்ளது.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
27-நவ-202123:18:41 IST Report Abuse
John Miller இரண்டு வருடம்களாக பாராளுமன்றத்திற்கு செல்லாமல் வீட்டில் பதுங்கி கொண்டு இருக்கும் அன்புமணி செயல் தலைவரா. நல்ல ஜோக். இவரை நியமிப்பதில் பாமக பலவீனம் அடையும்.
Rate this:
Cancel
amalan - thanjavur,டிஜிபௌசி
27-நவ-202122:40:41 IST Report Abuse
amalan அவர் தனது நலனுக்காக மட்டுமே கட்சியை நடத்துகிறார். அவர் தனது கட்சி ஆட்களை குண்டாக்களாக பயன்படுத்தி பணம் வசூலிக்கிறார். அவரது கட்சிக்காரர்கள் பெரும்பாலானோர் வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவர்கள். இவர்களின் மோசமான வாழ்க்கைக்கு திரு.அன்புமணி மற்றும் அவரது தந்தை மட்டுமே காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X