பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை, காஞ்சியில் விடிய, விடிய கன மழை; செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மேலும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளது.நேற்று சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டில் விடிய, விடிய மழை

சென்னை: தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மேலும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளது.latest tamil newsநேற்று சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டில் விடிய, விடிய மழை பெய்துள்ளது. ஆவடியில் அதிகப்பட்டசமாக 20 செ.மீ., மழை பொழிந்துள்ளது. கே.கே.நகர், அசோக்நகர், தி.நகர் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுவதை காண முடிகிறத. ரங்கராஜபுரம், தி நகர் மேட் தெருவில் உள்ள சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன. மழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 3,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


தாமிரபரணியில் வெள்ளம்


தொடர் மழை காரணமாக நெல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது போல் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதிகளில் வயல் வெளிகள் வெள்ள நீரில் மூழ்கியது.


latest tamil news
கவர்னருடன் முதல்வர் ஆலோசனை


இதற்கிடையில் மழை வெள்ளம் பாதிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கவர்னர் ரவியை இன்று கவர்னர் மாளிகையில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
27-நவ-202122:45:45 IST Report Abuse
 rajan கோயில்களை இடிப்பு, கோவில் நகைகள் அபகரிப்பு, விதிமீறி புதிய அர்ச்சகர்களை நியமித்து கருவறைக்குள் அனுமதித்தது இந்து உணர்வுகளை அவமதிப்பது போன்ற செயல்களால் இயற்கையின் கோபம் அழிவை கொடுக்கிறது. இது இன்னும் தொடரும். ஆட்சியாளர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. யானைகள் விபத்தில் இறந்ததும் ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. நிறைய அனுபவிப்பார்கள்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
27-நவ-202117:44:38 IST Report Abuse
Indhuindian Governments may come and Governments may to. But the flooding in Chennai would never cease. Piece meal laying of the so called storm water drain wtih no consideration for the elevation of the area and the drainage canal and its improper maintenance would go on for years. Citizens should condition to live in this pathetic condition since no Government has to will and courage to take proper legal action against encrochments and retrieving the water ways and canals.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
27-நவ-202111:23:04 IST Report Abuse
sundarsvpr மேலும் இரண்டு நாட்களுக்கு துன்பம் அனுபவிக்கவேண்டும் என்பது தடுக்க இயலாது. அதனை குறைத்திட அரசை நம்புவது ஆழம் தெரியாமல் தண்ணீரில் காலை விடுவது.போல். நம்மை நாம் காப்பாற்றிக்கொள்வது பற்றி சிந்தித்தல் அவசியம் . வாக்கு வங்கிக்கு கொடுக்கும் இலவசத்தை வசதியுள்ளவர்கள் தவிர்க்கவேண்டும். இதுதான் தர்மம். தர்மம் நம்மை மட்டுமல்ல மற்றவர்களையும் வாழவைக்கும். உங்கள் தொகுதி கவுன்சிலர் எம் எல் எ இவர்களை அணுகி உங்கள் குறைகளை கூறுங்கள் இதில் தயக்கம் கூடாது. இது உங்கள் கடமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X