பொது செய்தி

இந்தியா

12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Added : நவ 27, 2021
Share
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை ( 26.11.2021 - 2.12.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்சந்திரன், புதன். குரு, சுக்கிரன் சாதக நிலையில் உள்ளனர்.துர்க்கை வழிபாடு நிம்மதி தரும்.அசுவினி: சிறுமருத்துவச் செலவு ஏற்படலாம். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணியாளர்கள் திருப்தியுடன்
வாரபலன், ராசிபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை ( 26.11.2021 - 2.12.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்

சந்திரன், புதன். குரு, சுக்கிரன் சாதக நிலையில் உள்ளனர்.துர்க்கை வழிபாடு நிம்மதி தரும்.

அசுவினி: சிறுமருத்துவச் செலவு ஏற்படலாம். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணியாளர்கள் திருப்தியுடன் பணியாற்றுவர். முன்பிருந்த அவமானங்கள் நீங்கும். உங்கள் பக்க நியாயம் உலகுக்குத் தெரிய வரும்.

பரணி: அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்க வேண்டாம். தடைகளும், தாமதங்களும் சரியாகிவிடும்.

கார்த்திகை 1ம் பாதம்: தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். பெண்கள் வகையில் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்ற நிலை இருக்கும். உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை இருக்கும். செலவுகள் ஏற்படலாம்.


ரிஷபம்


latest tamil news



புதன், செவ்வாய், சந்திரனால் நற்பலன் உண்டு.குருவாயூரப்பன் வழிபாடு நலம் தரும்.

கார்த்திகை 2,3,4: கடமை உணர்வுடன் செயல்படுவீரகள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும், பயணம் செய்வதற்கு ஏற் வாரம் அல்ல அதனால் அதைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் செலவு அதிகமாக இருக்கும்.

ரோகிணி: ஆரோக்கிய விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தின் பாணியை மாற்றுவீர்கள். பணியிடத்தில் சவாலான வேலைகளை எடுத்து சிரமத்துடன் முடிக்கும் திறன் வரும்

மிருகசீரிடம் 1,2: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் நன்மையடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.


மிதுனம்



ராகு, கேது, குரு நன்மைகளை வழங்குவர்.சூரியன் வழிபாடு சிரமம் தீர்க்கும்.

மிருகசீரிடம் 3,4: பங்குச் சந்தை முதலீடுகளுக்கு செய்யும் முன் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பிள்ளைகளி்ன் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.

திருவாதிரை: நீங்கள் முன்னெடுத்த விஷயங்களில் சிறிய தடைகளுக்குப் பிறகு பெரிய வெற்றியை அடைவீர்கள். மருத்துவ சிகிச்சை எடுக்க திட்டமிட்டிருந்தால் அது நிறைவேறும். தொழிலில் வளர்ச்சியடைவீர்கள்.

புனர்பூசம் 1,2,3: பெற்றோரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், பெற்றோருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு பணிச்சுமை அதிகமாகலாம்.


கடகம்


குரு, சுக்கிரன், சூரியன் சாதக நிலையில் உள்ளனர்.சிவபெருமான் வழிபாடு நிம்மதி தரும்.

புனர்பூசம் 4: இந்த வாரத்தில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

பூசம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஆயில்யம்: வார இறுதியில் நீங்கள் நிறைய வேலைகளில் மும்முரமாக இருப்பீர்கள். நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள்.


சிம்மம்


latest tamil news



செவ்வாய், புதன், சுக்கிரன் அதிர்ஷ்டமான பலன்களை தருவர்.தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

மகம்: முயற்சிகள் எல்லாம் நல்லபடியாக முடியும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் மனதில் உதயமாகும். இது பிற்கால நன்மைக்கு வழிவகுக்கும். புதிய முயற்சிகள் நன்மை தருவதாக அமையும்.

பூரம்: பணி அழுத்தம் காரணமாகக் குடும்பத்தினருடன் குறைவான நேரம் செலவிடக் கூடிய சூழல் அமையலாம். செலவுகள் அதிகமாக இருக்கும், உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும்.

உத்திரம் 1: ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதுாரத் தொடர்பு பயனளிக்கும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். மனஅமைதி மீளும். உடல் நலனில் கவனம் தேவை. பணியில் அக்கறை தேவை.


கன்னி

சந்திரன், கேது, சுக்கிரன் சாதகமான அமர்வில் உள்ளனர்.ராகவேந்திரர் வழிபாடு நலம் தரும்.

உத்திரம் 2,3,4: தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீடு மனைகள் வாங்குவது சம்பந்தமாக முயற்சிகளில் உள்ளவர்கள் வெற்றி காண்பர்.

அஸ்தம்: அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். மனதில் நிம்மதி கூடும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதரர், நண்பர்களால் நன்மை அடைவீர்கள்.

சித்திரை 1,2: குடும்பத்தில் ஒருவருக்குத் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு கூடும் .குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். தந்தைவழி உறவினர் மூலம் நல்ல நன்மைகள் நடக்கும்.


துலாம்


குரு, புதன், சந்திரன் அற்புத நற்பலன்களை தருவர்விநாயகர் வழிபாடு நன்மை அளிக்கும்.

சித்திரை 3,4: புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சுவாதி: தானதர்மச் செயல்களில் ஈடுபடுவீர்கள். மனஅழுத்தம் மறையும். பெரியோர், பெற்றோரின் ஆலோசனை கிடைக்கும். பிரிந்த குடும்பங்கள் அல்லது நண்பர்களை சேர்த்து வைப்பீர்கள்.

விசாகம் 1,2,3: உங்களுக்குக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். மன உறுதி உண்டாகும்.


விருச்சிகம்

சுக்கிரன், குரு, சனி புதன் அமோக நன்மைகள் தருவர்.அம்மன் வழிபாடு நன்மை தரும்.
விசாகம் 4: கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபாடு வரும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல் தீரும். பெண்களால் குடும்பத்தின் கவுரவம் உயரும்.

அனுஷம்: கணவரின் முயற்சியால் குடும்ப நிலை உயரும். வீட்டில் சுப செலவு ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். தங்க, வெள்ளி பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கு பணவரவு திருப்தி தரும்

கேட்டை: வியாபாரம் சூடுபிடிக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆராய்ச்சிப் படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.


தனுசு


சந்திரன், ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர்.சனீஸ்வரர் வழிபாடு நலம் தரும்.

மூலம்: உடன் பணிபுரிவோரின் ஆதரவு உண்டு. சேமிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட வருத்தம் நீங்கும்.

பூராடம்: சிக்கல்கள் மறையும். தனவரவு உண்டாகும். குறைந்த அளவு முதலீட்டிலும் அதிக லாபத்தை அள்ளுவீர்கள். எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். உடல் உபாதை விலகும்..
உத்திராடம் 1: விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். குழந்தைகள் வழியில் கூடுதல் செலவு ஏற்படும். பெற்றோரின் உடல் நிலை திருப்தியளிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 24.11.2021 காலை 8:11 மணி - 26.11.2021 மாலை 5:24 மணி.


மகரம்



குரு, சுக்கிரன், சந்திரனால் நன்மை கிடைக்கும்.துர்க்கை வழிபாடு வளம் தரும்.

உத்திராடம் 2,3,4: வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். கடனாகக் கொடுத்திருந்த பணம் திரும்ப வந்துசேரும். நகை வியாபாரம் முன்னேற்றம் தரும்.

திருவோணம்: கடந்த வாரங்களில் எடுத்ததற்கெல்லாம் பிரச்னை என்றிருந்த நிலை மாறி நிம்மதி மீளும். பெரிய தீர்மானம் எடுக்கும்போது அனுபவசாலிகளின் ஆலோசனையை நாடுவது நல்லது.
அவிட்டம் 1,2: மேலதிகாரிகள் மற்றும் முதலாளியிடம் விட்டுக்கொடுப்பது நல்லது. சமூகத்தில் நற்பெயர் வாங்குவீர்கள். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். குடும்பத்தினருடன் வெளியில் சென்று மகிழ்வீர்கள்.
சந்திராஷ்டமம்: 26.11.2021 மாலை 5:25 மணி - 28.11.2021 இரவு 12:13 மணி.


கும்பம்

சுக்கிரன், சூரியன், சந்திரனால் நன்மை கிடைக்கும்.அனுமன் வழிபாடு மகிழ்ச்சி தரும்.

அவிட்டம் 3,4: உடன் பிறந்தோரால் ஆதாயம் உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருந்தால் பிரச்னை உண்டாகாது. சொத்துக்கள் மூலம் வருமானம் உயரும்.

சதயம்: சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். புதிய திட்டம் நிறைவேறுதில் தாமதமாகும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. விடாமுயற்சியால் வெற்றி கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: உயர்ந்தவர்களின் நட்பால் வளர்ச்சி காண்பீர்கள். உடல்நலக்குறைவு நீங்கும். வருமானம் திருப்தி தரும். பழைய கடன் அடைபடும். தம்பதியரிடையே இணக்கம் குறையும்.

சந்திராஷ்டமம்: 28.11.2021 இரவு 12:14 மணி - 1.12.2021 அதிகாலை 4:47 மணி.


மீனம்

புதன், சனி, சூரியன் நன்மை வழங்குவர்.விநாயகர் வழிபாடு கஷ்டம் தீர்க்கும்.

பூரட்டாதி 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வீண் அலைச்சல் இருக்கும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. தொலைதுாரத் தகவல்கள் நல்லவையாக இருக்கும்.

உத்திரட்டாதி: எதிலும் நிதானம் தேவை. உடல்நிலை சீராகும். கலைத்துறையினர் கோபமாகப் பேசுவதைத் தவிர்க்கவும். அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படாதபடி நடப்பது நல்லது.

ரேவதி: சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது நிதானமுடன் செயல்படுவது அவசியம். தொழிலில் சீரான வளர்ச்சி இருக்கும்.

சந்திராஷ்டமம்: 1.12.2021 அதிகாலை 4:48 மணி - 3.12.2021 காலை 7:50 மணி.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X