பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சியின் அவசர அரசாணையால் புரமோட்டர் புலம்பல்: திரும்பப் பெறுமாறு தி.மு.க., அரசுக்கு வேண்டுகோள்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதிய லே-அவுட்களில் புரமோட்டர்களே ரோடு போடுவதை அனுமதிக்காமல், அதற்கான தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டுமென்று அ.தி.மு.க., அரசு போட்ட ஆணையை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் இறுதியில், தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஓர் அரசாணை (எண்:181 தேதி: 9-12-2020) வெளியிடப்பட்டது.கடந்த 2019ல்
 அ.தி.மு.க.,  அவசர அரசாணை, புரமோட்டர் ,புலம்பல், திமுக, அரசு, வேண்டுகோள், A.D.M.K, ADMK, D.M.K, DMK, அ.தி.மு.க, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகம்


புதிய லே-அவுட்களில் புரமோட்டர்களே ரோடு போடுவதை அனுமதிக்காமல், அதற்கான தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டுமென்று அ.தி.மு.க., அரசு போட்ட ஆணையை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் இறுதியில், தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஓர் அரசாணை (எண்:181 தேதி: 9-12-2020) வெளியிடப்பட்டது.கடந்த 2019ல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளின்படியும், திட்ட அனுமதி வழங்குவதை எளிமையாக்கவும் இந்த அரசாணை வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.முன்பு, புதிதாக அமைக்கப்படும் லே-அவுட்களில், ரோடு, பொது ஒதுக்கீட்டு இடம், மின் வாரியத்துக்கு ஒதுக்க வேண்டிய இடம் ஆகியவற்றுக்கான தானப்பத்திரத்தை உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைத்தபின்பே, நகர ஊரமைப்புத்துறையில் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு திட்ட அனுமதி வழங்கப்படும். இறுதி ஒப்புதலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு வழங்கும்.

ஆனால் இந்த அரசாணையில், தானப்பத்திரத்தையும் நகர ஊரமைப்புத்துறைக்கு அனுப்ப வேண்டுமென்றும், திட்ட அனுமதியுடன் சேர்த்து அதுவும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி, மின் வாரியம் என்று பல்வேறு துறைகளுக்கு கோப்புகள் அனுப்புவதால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவே இப்படி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதில் எந்தப் பிரச்சினையுமில்லை.


கட்டணம் வசூலிக்க உத்தரவுஇதே அரசாணையில், சென்னை மாநகராட்சியில், புதிய லே-அவுட்களில் ரோடு, மழை நீர் வடிகால், குடிநீர் வசதிகளைச் செய்வதற்கான கட்டணத்தை வசூலிப்பதுபோல, தமிழகத்தின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் இனிமேல் இவற்றுக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சிகள் தவிர்த்த பிற உள்ளாட்சிகளில், அதாவது கிராம ஊராட்சிகளில் மட்டும், பிற கட்டணங்களை வசூலிப்பதுடன், தார் ரோடு, மழைநீர் வடிகால், குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கான மேல்நிலை நீர்த்தொட்டி போன்றவற்றை அமைப்பதை உறுதி செய்தபின்பே இறுதி ஒப்புதல் தரவேண்டும் என்றும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை, நகர்ப்புறங்களில் புதிய லே-அவுட்கள் அமைக்கும் புரமோட்டர் நிறுவனங்களே, தார் ரோடு, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் மற்றும் குடிநீர்த்தொட்டி போன்றவற்றை அமைத்துக்கொடுத்து விடுகின்றன.


விளம்பரத்துக்கு வேட்டுபெரிய புரமோட்டர் நிறுவனங்கள், பொது ஒதுக்கீட்டு இடங்களில், பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்தையும் கூட அமைத்துவிடுகின்றன.மிகவும் தரமாகவும், அழகாகவும் அமைக்கப்பட்டுள்ள அந்த ரோடுகள், தெருவிளக்கு, பூங்கா போன்ற வசதிகளைக் காண்பித்தே, தங்கள் லே-அவுட்டுக்கு விளம்பரமும் கொடுக்கின்றனர்.

ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணையின்படி, நகர்ப்புறங்களில் எந்த புரமோட்டர் நிறுவனங்களும் இனிமேல் இந்த வசதிகளைச் செய்யவும் முடியாது; விளம்பரம் செய்ய முடியாது.லே-அவுட் அமைக்கப்படும் பரப்பளவைப் பொறுத்து, இந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கு எவ்வளவு செலுத்த வேண்டுமென்று, சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சி நிர்வாகம், மதிப்பீடு தயாரித்து நோட்டீஸ் அனுப்பும். அந்தத் தொகையைச் செலுத்தினால், அவர்களுக்கு இஷ்டப்பட்ட காலத்தில், வழக்கமான 'உள்ளாட்சி' தரத்தில் ரோடும், மழைநீர் வடிகாலும் அமைப்பார்கள்.அவற்றை அமைக்கும்வரையிலும் காத்திருந்து, அதன்பின்பே மனையிடங்களை விற்க முடியும்.


நோட்டீஸ் பறக்கிறதுஇதில் கண்டிப்பாக விலை வித்தியாசமும் ஏற்படும். இந்த கட்டணத்தை வசூலிக்கும் வேலையை இப்போதே பல மாநகராட்சிகளில் அதிகாரிகள் செய்யத் துவங்கிவிட்டனர்.வெறும் மூன்று ஏக்கர் பரப்புள்ள லே-அவுட்டுக்கும், ஒரு கோடி ரூபாய் மதிப்பீடு தயாரித்து, அதைச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.தேர்தல் காலத்தில் இந்த அரசாணை போடப்பட்டதால், இதன் சாதக, பாதகங்கள் தெரியாமல் இருந்தது. இப்போதும், பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் ஏற்கனவே ரோடு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதிகளைச் செய்து விட்டு, விண்ணப்பித்திருப்பதால், பணம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவில்லை. சிறிய புரமோட்டர்களுக்கு இத்தகைய நோட்டீஸ்கள் வரத்துவங்கிவிட்டன.


தொழிலை பாதிக்கும்latest tamil newsஎதிர்காலத்தில் எல்லா நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் இந்த அரசாணையைப் பயன்படுத்தி, பணம் கட்டச் சொன்னால் அது ரியல் எஸ்டேட் தொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். இந்த அரசாணை, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழிலையே முடக்கி விடுவதுடன், தரமற்ற, அடிப்படை வசதிகளற்ற குடியிருப்புகளை உருவாக்குமென்றும் புரமோட்டர்கள் புலம்புகின்றனர்.எனவே, அவசரகதியிலும், அரைகுறையாகவும் போட்ட இந்த அரசாணையை தி.மு.க., அரசு திரும்பப் பெற்று, தெளிவான ஓர் அரசாணையை வெளியிட வேண்டுமென்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

----நமது சிறப்பு நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
27-நவ-202123:32:53 IST Report Abuse
G.Kirubakaran Promotors will not lay road as per building permit. சாக்கடைக்கு இடம் ஒதுக்க மாட்டார்கள் .அதிமுக எடுத்த முடிவு சரி தான்
Rate this:
Cancel
27-நவ-202112:59:15 IST Report Abuse
S SRINIVASAN Ada Pavikala, ellam surutal mayam. what ever spent for election will be double collected.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்தேர்தல் சமயம் கம்ப்ளீஷன் சர்டிபிகேட் பெறுவதற்கு முன்பே ஈபீ கனெக்ஷன் தரலாம்னு ஆணை உட்டார்கள் உடனே கோர்ட் தடையாணை போட்டதே...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-நவ-202112:31:43 IST Report Abuse
Kasimani Baskaran எல்லாம் வசூலிப்பார்கள் ஆனால் சேவை என்று ஒன்றே இருக்காது. அரசை நீதிமன்றத்தில் நிறுத்தலாமே.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
27-நவ-202123:43:08 IST Report Abuse
Amal Anandanஅதிமுக அரசை பிஜேபி கூட்டணியில் இருப்பதால் அதாரித்தவர்கள்தானே நீங்களும்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X