பொது செய்தி

இந்தியா

அக்சர், அஷ்வின் 'சுழல்' ஜாலம்: இந்திய அணி அசத்தல்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021
Share
Advertisement
கான்பூர்: கான்பூர் டெஸ்டில் இந்தியாவின் அக்சர் படேல், அஷ்வின் 'சுழல்' வலையில் நியூசிலாந்து அணி சிக்கியது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. ஸ்ரேயாஸ் சதம் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி
INDvNZ, Axar Patel, Kiwis, Jadeja, Nitin Menon

கான்பூர்: கான்பூர் டெஸ்டில் இந்தியாவின் அக்சர் படேல், அஷ்வின் 'சுழல்' வலையில் நியூசிலாந்து அணி சிக்கியது.


latest tamil news


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. ஸ்ரேயாஸ் சதம் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 129 ரன் எடுத்திருந்தது.


latest tamil news


Advertisement


இன்று(நவ.,27) மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. சகாவுக்கு கழுத்து பிடிப்பு ஏற்பட, கீப்பிங் பொறுப்பை மாற்று வீரர் ஸ்ரீகர் பரத் ஏற்றார். லதாம், யங் நிதானமாக விளையாடினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 151 ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் அஷ்வின் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது பந்து யங்கின் பேட் மீது உரசி செல்ல, கீப்பர் பரத் துடிப்பாக பிடித்து 'அப்பீல்' செய்தார். அம்பயர் அவுட் தர மறுத்தார். உடனே 'ரிவியூ' கேட்கும்படி பரத் வலியுறுத்தினார். இதில் பேட்டில் பந்து பட்டது தெரியவர, யங்(89) வெளியேறினார். உமேஷ் யாதவ் 'வேகத்தில்' கேப்டன் வில்லியம்சன்(18) வீழ்ந்தார். உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 197 ரன் எடுத்து வலுவாக இருந்தது.


latest tamil news




இதற்கு பின் அக்சர் படேல், அஷ்வின், ஜடேஜா 'சுழல்' ஜாலம் காட்ட, விக்கெட்கள் விரைவாக சரிந்தன. அக்சர் வலையில் ராஸ் டெய்லர்(11), ஹென்ரி நிக்கோலஸ்(2) சிக்கினார். நீண்ட நேரம் தொல்லை கொடுத்த லதாமையும்(95) அக்சர் வெளியேற்றினார். ரவிந்திர ஜடேஜா பந்தில் ரச்சின் ரவிந்திரா(13) போல்டானார். டாம் பிளண்டல்(13) நிலைக்கவில்லை. சவுத்தீயை அவுட்டாக்கிய அக்சர்(5) தனது 5வது விக்கெட்டை பெற்றார். அஷ்வினிடம் ஜேமிசன்(23), சாமர்விலே(6) அவுட்டாகினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இந்தியா சார்பில் அக்சர் 5, அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர்.


latest tamil news



பின் 49 ரன் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில்(3) ஏமாற்றினார். இந்திய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்திருந்தது. ஒட்டுமொத்தமாக 63 ரன் முன்னிலை பெற்றிருந்தது. நாளை நமது பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக ஆடினால், வலுவான ஸ்கோர் எடுத்து நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கலாம்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X