கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தத்து கொடுத்த குழந்தையை திருப்பிக் கேட்ட பெற்ற தாய்: வளர்ப்பு தாயிடமே விடச்சொன்ன நீதிமன்றம்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: தத்துக்கொடுத்த சிறுமியை கேட்டு, பெற்ற தாய், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சிறுமியை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சத்யா. இவரது சகோதரர் சிவக்குமார். சத்யாவுக்கு ரமேஷ் என்பவருடனும், சிவக்குமாருக்கு சரண்யா என்பவருடன் திருமணம் நடந்தது. சத்யா தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை
தத்து,  குழந்தை,பெற்ற தாய்,வளர்ப்பு தாய், நீதிமன்றம்

சென்னை: தத்துக்கொடுத்த சிறுமியை கேட்டு, பெற்ற தாய், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சிறுமியை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சத்யா. இவரது சகோதரர் சிவக்குமார். சத்யாவுக்கு ரமேஷ் என்பவருடனும், சிவக்குமாருக்கு சரண்யா என்பவருடன் திருமணம் நடந்தது. சத்யா தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால், சிவக்குமார். தனது 3.5 மாத குழந்தையை சத்யாவுக்கு கடந்த 2012ல் தத்து கொடுத்தார். கடந்த 2019 ம் ஆண்டில் சத்யா கணவர் ரமேஷ் புற்றுநோயால் காலமானார். இதனால், தத்து கொடுத்த குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என சரண்யா, அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். இந்த பிரச்னை காரணமாக சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில், குழந்தையை ஒப்படைக்க கோரி, தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


latest tamil newsஇதனை விசாரித்த நீதிபதிகள் பிஎன் பிரகாஷ் மற்றும் மஞ்சுளா அமர்வு, சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் வேண்டும் என சிறுமி கூறினார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வளர்ப்பு தாயிடமே வளர்ந்த குழந்தை தற்போது சிறுமி ஆகிவிட்டார். இதனால், அச்சிறுமியைவளர்ப்பு தாயே வளர்க்க வேண்டும் எனவும், சிறுமியை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க வேண்டும். பெற்ற தாய், வாரம் ஒரு முறை சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
28-நவ-202105:25:11 IST Report Abuse
Sanny இன்று உலகில் பலபாகங்களிலும் இந்திய, இலங்கை ஏழை தாய்மார், தங்கள் ஏழ்மை நிலைமைக்காரணமாக வெளிநாட்டு தம்பதிகளுக்கு தத்து கொடுத்துளார்கள். இன்று அந்த குழந்தைகள் படித்து நல்ல தொழில் செய்து, தாங்கள் தத்து எடுத்த பிள்ளைகள் என்று அறிந்து, இன்று தங்கள் பையாலாஜிக் பெற்றோரை தேடி அந்த நாடுகளுக்குச் சென்று பல இலட்சம் பணம் செலவு செய்து, தங்கள் உண்மை பெற்றோரை தேடுகிறார்கள். பலருக்கு கிடைத்து அவர்களுடன் உறவை பலமாக்கி பேனித்துவருகிறார்கள். இன்னும் சில பிள்ளைகள் உண்மை பெற்றோரை பல இலட்சம் செலவு செய்து தேடி வருகிறார்கள்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-நவ-202100:25:02 IST Report Abuse
Girija சரியான தீர்ப்பு
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-நவ-202118:59:48 IST Report Abuse
Vena Suna தனுஷை விற்ற பிறகு அவர் ஏன் குழந்தை என்று வழக்கு போட்ட மாதிரி இருக்கு...ஹிஹிஹி
Rate this:
Girija - Chennai,இந்தியா
28-நவ-202100:26:53 IST Report Abuse
Girijaடி என் ஏ எடுக்காமல் வாங்கப்பட்ட தீர்ப்பு . அவருக்கும் குடும்பத்தில் உள்ள எவருக்கும் உருவ ஒற்றுமை கூட இல்லை ....
Rate this:
Girija - Chennai,இந்தியா
28-நவ-202100:32:36 IST Report Abuse
Girijaஅவர்கள் விற்கவில்லை, டி என் ஏ எடுக்காமல் தீர்ப்புதான் வாங்கப்பட்டது. இவரை போல் உருவ ஒற்றுமை குடும்பத்தில் ஒருவருக்கும் இல்லை. சகோதரிகள் மருத்துவர்கள் தழும்புகளை மறைத்து விட்டனர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X