அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் முதல்வர் பேசியது குறித்து மாறுபட்ட செய்தி முரண்பாடு!

Updated : நவ 29, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை:தமிழக கவர்னர் என்.ஆர்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியது குறித்து, மாறுபட்ட செய்திகள் வெளியாகியதால், முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 'நீட்'தொடர்பான மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தியதாக அரசு தரப்புஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெள்ள சேதம் தொடர்பாக விவாதித்ததாக ராஜ்பவன் தகவல் வெளியிட்டுள்ளது.கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் , கவர்னர், சந்திப்பு

சென்னை:தமிழக கவர்னர் என்.ஆர்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியது குறித்து, மாறுபட்ட செய்திகள் வெளியாகியதால், முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 'நீட்'தொடர்பான மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தியதாக அரசு தரப்புஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெள்ள சேதம் தொடர்பாக விவாதித்ததாக ராஜ்பவன் தகவல் வெளியிட்டுள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கப் போவதாக தகவல் வெளியானது. அதன்படியே, காலை 11:00 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு முதல்வர் சென்றார்.அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிர மணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சிறப்பு பணி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர். அனைவரும் கவர்னரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது.


குழு அமைப்பு

இது தொடர்பாக, அரசு தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு முறையானது, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா; பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை களைய என்ன செய்யலாம். அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய, நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப் படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளிக்க, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் அமைத்தார்.
இக்குழுவானது, நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தது; மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களை தீர ஆராய்ந்தது. சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு, நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, அவற்றை அகற்றிட, மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து, அரசுக்கு பரிந்துரைகளை அளித்தது.
குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 13ல், தமிழக சட்டசபையில், 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா' நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெற கவர்னருக்கு அனுப்பப்பட்டது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் வைத்து, ஜனாதிபதி ஒப்புதலை விரைவில் பெற, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என, கவர்னரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் சந்திப்பு முடிந்த பின், கவர்னர் மாளிகையில் இருந்து, கவர்னரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சந்தித்த புகைப்படம் ஒன்று வெளியானது.


சர்ச்சை

அதில், 'கவர்னர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.'அப்போது, மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.நீட் மசோதா குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
அரசு செய்திக் குறிப்பில், கவர்னர் மாளிகை தரப்பில் கூறப்பட்டது போல, மழை பாதிப்பு, கொரோனா குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரு தரப்பின் முரண்பட்ட தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Balasubramanian - Chennai,இந்தியா
28-நவ-202120:15:52 IST Report Abuse
R.Balasubramanian There's no vidiyal , not even vellam vadiyal. People are suffering
Rate this:
Cancel
P Ravindran - Chennai,இந்தியா
28-நவ-202119:24:04 IST Report Abuse
P Ravindran எப்போதும் பொய் தான். இவர்களுக்கு பொய்மை மற்றும் மக்களை ஏமாற்றுவதே அடித்தளம்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-நவ-202118:58:56 IST Report Abuse
DVRR பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த திருட்டு திராவிடர்களுக்கு இதெல்லாம் சர்வசகஜமப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X