டில்லி: தென்னாப்ரிக்காவில் இருந்து பரவி வரும் 'ஒமேக்ரான்' வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள டில்லி அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கொரோனா ரகமான 'ஒமேக்ரான்' தற்போது இந்தியாவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து முக்கிய விமான நிலையங்களில் ஆப்பிரிக்க பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.தலைநகர் டில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து ஓமேக்ரோன் பரவ அதிக வாய்ப்புள்ளதால் டில்லி சுகாதாரத்துறை தற்போதே விழித்துக் கொண்டுள்ளது.
லெப்டினன்ட் கவர்னர் அணில் பைஜால் கமிஷனர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வருகிறார். பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து தங்களை தற்காத்துக்கொள்வதில் மும்முரம் காட்டவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
டில்லி பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் விரைவில் முக்கிய கூட்டம் ஒன்றை கூட்ட உள்ளனர். இந்த கூட்டத்தில் வைராலஜிஸ்டுகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுகுறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது:கொரோனாவின் இரண்டு அலைகளையும் டில்லி அரசு சிறப்பாகக் கையாண்டு உள்ளதாகவும் தற்போது ஒமேக்ரான் டில்லிக்குள் நுழையாமல் தற்காக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE