பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளோடு நானும் களத்தில் நிற்கிறேன், நிற்பேன்: முதல்வர் ஸ்டாலின்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை:அடுத்த சில நாட்களுக்கும் மழை தொடரும் என்பதால் மக்கள் பிரதிநிதி மற்றும் அரசு அதிகாரிகளோடு நானும் களத்தில் நிற்கிறேன், நிற்பேன் என முதல்வர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: அடுத்த சில நாட்களுக்கும் மழை தொடரும் என்பதால் மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம் காலம் பார்க்காது

சென்னை:அடுத்த சில நாட்களுக்கும் மழை தொடரும் என்பதால் மக்கள் பிரதிநிதி மற்றும் அரசு அதிகாரிகளோடு நானும் களத்தில் நிற்கிறேன், நிற்பேன் என முதல்வர் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: அடுத்த சில நாட்களுக்கும் மழை தொடரும் என்பதால் மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம் காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதல்வராகிய நானும் களத்தில் நிற்கிறேன் நிற்பேன்.


latest tamil news




ஒரே மாதத்தில் 1000 மி.மீட்டர் மழை



சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீட்டர் மழை பதிவானது இது நான்காவது முறை என்கின்றனர் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழை பொழிவிலும் உயிர் பலிகளை தடுத்து முடிந்தவரை உடமை சேதங்களை குறைத்து பாதிப்புகள் விரைந்து சரி செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்துள்ளதற்கு முழுமுதற்காரணம் , ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி,மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை,உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் தான் . அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது. இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
30-நவ-202114:32:06 IST Report Abuse
Swaminathan Chandramouli ஒருத்தர் கூட மாஸ்க் போடவில்லை . எவனாவது ஏமாளி மாஸ்க் போனால் சாலையில் போனால் அவனை இநத லஞ்ச போலீஸ் அடித்து அபராதம் என்ற பெயரில் கணிசமாக ஒரு தொகையை அவரிடம் இருந்து களவாடி அடித்து துரத்துவான்கள்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-நவ-202111:59:01 IST Report Abuse
Girija தண்ணி யூம் தான் மாசக்கணக்கில் நிக்குது... ஜெ 2015 எப்படி கையாண்டார்? எல்லோரையும் பின்னி பெடல் எடுத்தார். ஒரு வாரத்தில் ஊரே காய்ந்து விட்டது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-நவ-202111:42:43 IST Report Abuse
J.V. Iyer கொளத்தூர்ல என்ன நெலம?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X