யானைகளுக்கு நேர்ந்த சோகம்; காரணம் ரயிலின் அதிவேகம்?| Dinamalar

யானைகளுக்கு நேர்ந்த சோகம்; காரணம் ரயிலின் அதிவேகம்?

Updated : நவ 28, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (2) | |
கோவை: கோவை அருகே, மூன்று யானைகளை பலி வாங்கிய ரயில் அதிவேகத்தில் இயக்கப்பட்டதா என, தொழில்நுட்ப ரீதியான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயது பெண் யானை, 6 வயது குட்டியானை மற்றும், 18 வயது மக்னா யானை நேற்று முன் தினம், மங்களூர் - சென்னை ரயில் மோதி உயிரிழந்தன. வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் யானைகளின்
 யானைகளுக்கு நேர்ந்த சோகம்; காரணம் ரயிலின் அதிவேகம்?

கோவை: கோவை அருகே, மூன்று யானைகளை பலி வாங்கிய ரயில் அதிவேகத்தில் இயக்கப்பட்டதா என, தொழில்நுட்ப ரீதியான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயது பெண் யானை, 6 வயது குட்டியானை மற்றும், 18 வயது மக்னா யானை நேற்று முன் தினம், மங்களூர் - சென்னை ரயில் மோதி உயிரிழந்தன. வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் யானைகளின் சடலங்களை நேற்று ஆய்வு செய்தார். மூன்று யானைகள் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ரயிலை வேகமாக இயக்கிய ரயில்வே லோகோ பைலட் கேரள மாநிலத்தை சேர்ந்த சுபேர், உதவி லோகோ பைலட் அகில் 34, இருவரிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்தியப்பின் விடுவித்தினர்.


latest tamil news
கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கூறுகையில், ''வனத்துறை, ரயில்வே துறை உடன்பாட்டின்படி, ரயில் சரியான வேகத்தில் இயக்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இரவில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன,'' என்றார்.


உயிரிழந்தது 'மக்னா'உயிரிழந்த மூன்று யானைகளில் ஒன்று, 18 வயதுடைய மக்னா. தந்தமில்லாத ஆண் யானையே மக்னா யானை என்றழைக்கப்படுகிறது. மக்னா யானைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள நிலையில் அவற்றில் ஒரு யானை இறந்திருப்பது பரிதாபத்துக்குரியது. மேலும், உயிரிழந்த, 25 வயது பெண் யானை சடலம் பிரேதப் பரிசோதனை செய்தபோது, வயிற்றில் ஒரு மாதத்துக்கும் குறைவான கரு இருந்துள்ளது.


'சிப்' பறிமுதல்ரயில்களின் வேகத்தை கணக்கிட ரயில் என்ஜினில், பிரத்யேக சிப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிப் மூலம், விபத்து நடந்த குறிப்பிட்ட நேரத்தில் ரயிலின் வேகத்தை கணக்கிட முடியும். இதை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தகவல்களை திரட்ட, சேலம் கோட்டத்தை சேர்ந்த ஈரோடு ரயில்வே தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news
விபத்து பகுதியில், 'ரயில் தண்டவாளத்தை யானைகள் கடக்கும் பகுதி' என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இது, கோவையிலிருந்து கேரளா செல்லும் ரயில்களின் பார்வையில் படும்படி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறப்பு ரயில், கேரளாவில் இருந்து, எதிர் திசையில் பயணித்ததால் டிரைவர் பார்வையில் படாமல் போயிருக்கலாம்.


அதிவேகம் காரணம்?


.


latest tamil newsயானைகள் மீது அதிவேக ரயில் மோதியதால் தான், 145 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு சம்பவங்களில் பெரும்பாலும், ரயில் வரும்போது யானைகள் ஒதுங்க இடம் இல்லாதது காரணமாக இருக்கும். ஆனால், குறிப்பிட்ட பகுதியில், யானைகள் ஒதுங்க இடம் இருந்து அவற்றால் ஒதுங்க முடியாமல் விபத்து ஏற்பட்டதற்கு காரணம் அதிவேகம் மட்டுமே காரணம் என வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.விபத்து நடந்த பகுதியில் ரயில்வே, வனத்துறை இடையேயான ஒப்பந்தத்தின் படி, ரயிலை அதிகபட்சம், 45 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். ஆனால், சிறப்பு ரயில் என்பதால் அப்பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் ரயில் இயக்கப்படாமல், 75 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே, யானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலை நிறுத்த முடியவில்லை என, வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.


நிதி கேட்கிறது ரயில்வே


கோவை - பாலக்காடு இடையே உள்ள ரயில்பாதையில் தான் ரயில்கள் மோதி யானைகள் அதிகளவு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்காக, கடந்த 2010 ல் ஆண்டு நடந்த கூட்டத்தில் வனப்பகுதியில் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே யானைகள் வராமல் தடுப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, கடந்த, 2012ல் ரூ.29 கோடி வழங்குமாறு, வனத்துறை அமைச்சகத்துக்கு ரயில்வே கடிதம் அனுப்பியது. ஆனால், நிதி ஒதுக்கவில்லை. தற்போது திட்டமதிப்பு, ரூ.39 கோடிக்கும் அதிகமாகி உள்ளது. வனத்துறையினர் கூறுகையில்,'ரயில்வே நிர்வாகம் கோரியுள்ள தொகையை மத்திய வனத்துறை அமைச்சகம் விரைந்து ஒதுக்கும்' என, கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X