பிரச்னைகள் அடிப்படையில் பா.ஜ.,வுக்கு ஆதரவு? தர திமுக., முடிவு

Updated : நவ 28, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், பிரச்னைகளின் அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவு தருவதற்கு தி.மு.க., முடிவு செய்துள்ளது. பார்லி.,யை முடக்கும் விஷயத்தில்காங்கிரசிடமிருந்து விலகியிருக்கவும் திட்டமிட்டுள்ளது. நாளை நடக்க உள்ள தி.மு.க., - எம்.பி.,க்கள்கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்
பா.ஜ.,வுக்கு ஆதரவு? தி.மு.க., முடிவு

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், பிரச்னைகளின் அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவு தருவதற்கு தி.மு.க., முடிவு செய்துள்ளது. பார்லி.,யை முடக்கும் விஷயத்தில்காங்கிரசிடமிருந்து விலகியிருக்கவும் திட்டமிட்டுள்ளது. நாளை நடக்க உள்ள தி.மு.க., - எம்.பி.,க்கள்கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்றுநடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் தி.மு.க., பங்கேற்க உள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ளது. விவசாய சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து, முந்தைய கூட்டத் தொடர்களைப் போலவே இந்தக் கூட்ட தொடரையும் முடக்குவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.ஆனால், தமிழகம் சார்ந்த பிரச்னைகளை இந்தக் கூட்டத் தொடரில் முன்வைத்து, மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சிக்கும்படி தன் கட்சி எம்.பி.,க்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


தீர்மானத்துக்கு ஒப்புதல்

மருத்துவப் படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோது, இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.பார்லிமென்டிலும், மத்திய அரசு அளவிலும், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது ஸ்டாலினின் உத்தரவு.
இதைத் தவிர மிக முக்கியமான பிரச்னையான, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரின் விடுதலையை உறுதி செய்வதிலும் ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார்; இதற்கும் மத்திய அரசின் தயவு தேவை.வரலாறு காணாத மழையால் சென்னை உட்பட தமிழகமே தத்தளித்து வருகிறது; பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது; இது, தி.மு.க., அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
மழை நிவாரணம் தொடர்பாக மத்திய அரசின் நிதியை எதிர்நோக்கியுள்ளது.இவ்வாறு பல்வேறு விஷயங்களிலும் மத்திய அரசுடன் அனுசரித்து சென்றால் தான், தமிழகத்துக்கு தேவையானது கிடைக்கும் என்பதை தி.மு.க., தலைமை உணர்ந்துள்ளது.


அதிக முக்கியத்துவம்

கவர்னர் ரவி உடனான சந்திப்புக்குப் பின், தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் பாலுவை அழைத்து ஸ்டாலின் பேசியுள்ளார். அப்போது பிரச்னைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.விவசாய சட்டங்களை நீக்கும் மசோதா, கூட்டத் தொடரின் முதல் நாளில் தாக்கல் செய்யப்பட்டால், அதற்கு தி.மு.க., தரப்பில் முழு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்று நடக்க உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க., சார்பில் பாலு மற்றும் சிவா பங்கேற்க உள்ளனர். பார்லி.,யில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க, தி.மு.க., - எம்.பி.,க்களின் கூட்டம், நாளை டில்லியில் நடக்க உள்ளது.
பார்லி., வளாகத்தில் தி.மு.க.,வுக்கு என, இரண்டு மிகப் பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு நடக்க உள்ள இந்தக் கூட்டத்துக்கான அறிவிப்பில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி கையெழுத்திட்டுள்ளார். அவருக்கு திடீரென அதிக முக்கியத்துவம் தரப்படுவது, பா.ஜ.,வுடன் நெருக்கமாக இருக்க தி.மு.க., தயாராக உள்ளதை சுட்டிக் காட்டுவதற்காக என கூறப்படுகிறது.


விலகியிருக்க முடிவு

இதற்கிடையே கடந்த கூட்டத் தொடர்களைப் போலவே இந்தக் கூட்டத் தொடரையும் முடக்குவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள தி.மு.க., இதில் இருந்து விலகியிருக்கவும் முடிவு செய்து உள்ளது.
'நாங்கள் தற்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளோம். அதனால் மத்திய அரசை முழுமையாக எதிர்க்க முடியாது. பிரச்னைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரவும் தயாராக உள்ளோம்' என, தி.மு.க., தரப்பில் இருந்து காங்கிரசுக்கு தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் இது போன்ற நிலையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


கழற்றி விடுகிறது திரிணமுல்

எதிர்க்கட்சிகள் கூடாரத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் இடையே பனிப்போர் தொடர்கிறது. கடந்த சில நாட்களாக இரு கட்சிகளும் பரஸ்பரம் மற்றவர் மீது குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் கூறி வருகின்றன.இந்நிலையில் திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளதாவது:
வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இல்லை. அதேநேரத்தில், மக்கள் பிரச்னைகளில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்.காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல பிரச்னைகள் உள்ளன. முதலில் அவர்கள் அதை சரி செய்யட்டும். அதன் பின் அவர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆராய்வோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-202122:50:14 IST Report Abuse
Krishna ONDRIYA ARASU ENA SCENE POTTA UDAN PARUPPU TASMAC MATTAIGSL TOTSL SURRENDER.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
28-நவ-202122:36:52 IST Report Abuse
Mohan ஏதாவது கிடைக்கும்னா எதுவேணாலும் செய்வோம்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
28-நவ-202122:28:06 IST Report Abuse
Mohan வேற வழி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X