'சென்ட்ரல் விஸ்டா' திட்டம்: கண்காணிப்பு குழு அமைப்பு

Updated : நவ 29, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:'சென்ட்ரல் விஸ்டா' எனப்படும் புதிய பார்லி., கட்டுமான திட்டப் பணிகளை கண்காணிக்க ஐந்து நபர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.டில்லியில் ஜனாதிபதி மாளிகை அருகே சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பார்லி., கட்டடம், மத்திய அமைச்சகங்களை உள்ளடக்கிய தலைமை செயலகம், பிரதமர், துணை ஜனாதிபதி இல்லங்கள் ஆகியவை கட்டப்பட உள்ளன. கட்டுமானப்
'சென்ட்ரல் விஸ்டா' திட்டம்:  கண்காணிப்பு குழு அமைப்பு

புதுடில்லி:'சென்ட்ரல் விஸ்டா' எனப்படும் புதிய பார்லி., கட்டுமான திட்டப் பணிகளை கண்காணிக்க ஐந்து நபர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
டில்லியில் ஜனாதிபதி மாளிகை அருகே சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பார்லி., கட்டடம், மத்திய அமைச்சகங்களை உள்ளடக்கிய தலைமை செயலகம், பிரதமர், துணை ஜனாதிபதி இல்லங்கள் ஆகியவை கட்டப்பட உள்ளன. கட்டுமானப் பணிகடந்த 2019ம் ஆண்டில் 13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 2020ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதற்கட்டமாக புதிய பார்லி., கட்டடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை கண்காணிக்க, முன்னாள் மத்திய நிதித் துறை செயலர் ரத்தன் பி. வாடல் தலைமையில் ஐந்து நபர் குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இக்குழுவில் துணை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி பி.கே. திவாரி, 'லார்சன் அண்டு டூப்ரோ' நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஷைலேந்தர் ராய், டில்லி இந்திய தொழில்நுட்ப மைய பேராசிரியர் மவுசம் மற்றும் நிதியமைச்சக இணைச் செயலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடர்பான அனைத்து பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து, திட்டமிட்டபடி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். கொள்முதல்மேலும், திட்டப் பணிகளுக்கான பொருட்களின் விலை நிலவரங்களை கண்காணித்து கொள்முதல் செய்ய துணை புரிவது, அனைத்து பொருட்களையும் முழுமையாக பயன்படுத்துவது, பணிகள் உயர்தரமாக உள்ளனவா என்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.
அத்துடன் பசுமை கட்டட விதிமுறைகளை பின்பற்றி கட்டடம் கட்டப்படுகிறதா என்பதையும் இக்குழு கண்காணிக்கும் என, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
28-நவ-202112:46:50 IST Report Abuse
sankaseshan .. This has been answered several time
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-நவ-202107:05:19 IST Report Abuse
Kasimani Baskaran அருமை. இன்னும் பிரிட்டிஷ்கால வட்டத்துக்குள்ளே சுற்றாமல் விரைவாக கட்டி முடித்து பாராளுமன்றம் திறக்க வேண்டும்.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
28-நவ-202105:25:42 IST Report Abuse
அன்பு பணமுடக்கம், ஜிஎஸ்டி, கொரநா, விவசாய சட்டம் என்று தொடர்ந்து பொதுமக்கள் அவதி அடைந்துவரும் நிலையில், அதை கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல், ஒருலட்சம் கோடி ரூபாய் செலவில் விஸ்தா கட்டுமானம் மக்களின் மனதில் ரணம் பதிக்கிறது என்பதை உபி தேர்தலுக்கு பின், மத்திய அரசு விரைவில் புரிந்துகொள்ளும்.
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-நவ-202109:13:33 IST Report Abuse
Kasimani Baskaranபல்லாயிரம் கோடி கடன் வாங்கி பார்க் கட்டலாம், கூவ நிதிக்கரையும் கடற்கரையும் இணையும் இடத்தில் அரசு நிலத்தில் இலவசமாக கல்லரை கட்டலாம், நகைக்கடனைக்கூட இரத்து செய்யலாம்... சிங்காரச்சென்னை அமைக்க பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கலாம் - ஆனால் விவசாயிகள் ஏழ்மையிலிருந்து வெளி வந்துவிடக்கூடாது. என்ன ஒரு வில்லத்தனம்......
Rate this:
ArGu - Chennai,இந்தியா
29-நவ-202108:52:08 IST Report Abuse
ArGu2500 கோடியில் ஒரு பூங்கா காட்டுனா மக்களுக்கு எவ்வளவு பயன் உள்ளதா இருக்கும். அதவுட்டுட்டு சென்ட்ரல் விஸ்டா காட்டுனா என்ன அர்த்தம்? உபி தேர்தல் வேற வருது..... மோடி ஒழிக........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X