பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கொள்கை வெளியீடு லஞ்சம் கொடுத்து இடம் மாறும் சார் - பதிவாளர்களுக்கு 'வேட்டு!'

Updated : நவ 29, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: லஞ்சம் கொடுத்து, அதிக வசூல் உள்ள இடங்களுக்கு மாறுதல் பெறும் சார் - பதிவாளர்களுக்கு வேட்டு வைக்கும் வகையில், புதிய கொள்கையை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், 200 அலுவலகங்களில் அதிக பத்திரங்கள் பதியும் நிலை உள்ளது. கடும் போட்டிவசூல் வேட்டை நடத்தலாம் என்பதால், இங்கு பணிக்கு வர சார் - பதிவாளர்களிடம் கடும்
புதிய கொள்கை வெளியீடு லஞ்சம் கொடுத்து இடம் மாறும் சார் - பதிவாளர்களுக்கு 'வேட்டு!'

சென்னை: லஞ்சம் கொடுத்து, அதிக வசூல் உள்ள இடங்களுக்கு மாறுதல் பெறும் சார் - பதிவாளர்களுக்கு வேட்டு வைக்கும் வகையில், புதிய கொள்கையை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், 200 அலுவலகங்களில் அதிக பத்திரங்கள் பதியும் நிலை உள்ளது.


கடும் போட்டி

வசூல் வேட்டை நடத்தலாம் என்பதால், இங்கு பணிக்கு வர சார் - பதிவாளர்களிடம் கடும் போட்டி ஏற்படுகிறது. மேலதிகாரிகள், அதிகார மையம் போன்ற முக்கிய புள்ளிகளுக்கு, சில கோடி ரூபாய் வரை கொடுத்து, இடமாறுதல் பெறுகின்றனர். இப்படி கொட்டிக் கொடுத்து இடம் மாறுபவர், மக்களிடம் எப்படி நேர்மையாக நடப்பார் என்ற கேள்வி எழுகிறது. இதனால்,
பதிவுத்துறையின் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது.

இத்தகைய சார் - பதிவாளர்களுக்கு வேட்டு வைக்கும் வகையில், பதிவுத்துறையின் புதிய
இடமாறுதல் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:சார் - பதிவாளர்கள் இடமாறுதலில் நடக்கும் குளறுபடிகளுக்கு தீர்வாக, இந்த புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.சார் - பதிவாளர் அலுவலகங்கள், வருவாய், பத்திரங்கள் வருகை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, 100 அலுவலகங்கள், 'அ' வகையிலும், 200 அலுவலகங்கள் 'ஆ' வகையிலும், 275 அலுவலகங்கள், 'இ' வகையிலும் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த பட்டியல் அரசாணையின் இணைப்பாக வெளியிடப்பட்டு உள்ளது.


15 நாட்கள்

இவ்வகைப்பாடுகள் அடிப்படையில், ஒரு சார் - பதிவாளர், முதலில் 'அ' வகை அலுவலகத்தில் ஓராண்டு; அடுத்து 'இ' வகை அலுவலகத்தில் மூன்று ஆண்டுகள்; அதன்பின், 'ஆ' வகை அலுவலகத்தில், இரண்டு ஆண்டுகள் பணி புரிய வேண்டும். இந்த அடிப்படையிலேயே சார் - பதிவாளர்களுக்கான இடமாற்றம் மேற்கொள்ளப்படும்.ஆண்டு தோறும் சராசரி வருவாய், பத்திரங்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஏப்., 15 நிலவரப்படி மாற்றி அமைக்கப்படும்.

பத்திரங்கள் அதிகமாக குவியும் சார் - பதிவாளர் அலுவலக எல்லைகள் மறுவரையறை செய்யப்படும்.அயல்பணி அடிப்படையில், சார் - பதிவாளர் இடத்துக்கு உதவியாளர்களை நியமிப்பது என்றால், அது, 15 நாட்களுக்கு மட்டும் இருக்க வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படும் உதவியாளர்கள், அந்த மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க கூடாது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
28-நவ-202121:36:57 IST Report Abuse
G.Kirubakaran அப்படி என்றால் அரசே ஒத்துக்கொள்கிறது. சார் பதிவாளர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று. ஒரு ரூபாயாவது லஞ்சம் கொடுக்காமல், ஒரு பதிவு கூட செய்ய முடியாது என்பது தான் நிஜம். அரசால் ஒன்றும் எடுக்க முடியாது
Rate this:
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
28-நவ-202121:02:27 IST Report Abuse
Sathiamoorthy.V பன்றிகள் கழுதைகள் எங்கு சென்றாலும் பன்றிகள் கழுதைகளாகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel
Kalyanaraman - Chennai,இந்தியா
28-நவ-202109:34:19 IST Report Abuse
Kalyanaraman அயல் பணி அடிப்படையில், அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் 15 நாட்களுக்கு அயல் பணி அடிப்படையில் ஆண்டுதோறும் மாறிமாறி வழங்கப்படலாம். இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிப்பது மிகமிக அதிகரிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X