வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே... 365 நாளும் அன்னதானம்; சாதிக்கும் தனி ஒருவர் | Dinamalar

வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே... 365 நாளும் அன்னதானம்; சாதிக்கும் 'தனி ஒருவர்'

Added : நவ 28, 2021 | கருத்துகள் (9) | |
அருப்புக்கோட்டை:மனிதருக்கு கட்டாயம் இருக்க வேண்டியது நிதானம். அதை விட முக்கியமானது அன்னதானம். ஒருவருக்கு வயிறார உணவை அளித்தாலே மனம் நிம்மதி பெறும். இதை பலர் அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். 'போதும்' என்ற சொல்லே அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தை கொடுக்கும் என்பார்கள். அன்புடனும் கருணையுடனும் செய்யும் அன்னதானங்கள் நம்முடைய அடுத்த பிறவி வரை பலனை
வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே...  365 நாளும் அன்னதானம்; சாதிக்கும்  'தனி ஒருவர்'

அருப்புக்கோட்டை:மனிதருக்கு கட்டாயம் இருக்க வேண்டியது நிதானம். அதை விட முக்கியமானது அன்னதானம்.

ஒருவருக்கு வயிறார உணவை அளித்தாலே மனம் நிம்மதி பெறும். இதை பலர் அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். 'போதும்' என்ற சொல்லே அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தை கொடுக்கும் என்பார்கள். அன்புடனும் கருணையுடனும் செய்யும் அன்னதானங்கள் நம்முடைய அடுத்த பிறவி வரை பலனை கொடுக்கும்.


அன்னதானம் செய்பவர்கள் வாழ்வில் பசியே வராது. கடவுளின் பரிபூரண ஆசியும் கிடைக்கும்.
இத்தகைய அன்னதானத்தை அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த பாபு ஆண்டு முழுவதும் 365 நாட்களும் இடைவிடாது செய்து வருகிறார். ஆதரவற்றவர்களுக்கும், உணவு கேட்டு வருபவர்களுக்கும் அவ்வப்போது உணவு வழங்கி வந்த இவருக்கு, ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கலாமே என்ன எண்ணத்தால் அவரது இடத்திலே தினம் மதிய
வேளையில் 40 முதல் 60 பேர்களுக்கு உணவை பொட்டலமாக வழங்கி வழங்கி வருகிறார்.

பண்டிகை காலங்களில் சேலை, வேட்டிகள் வழங்குகிறார். தி.மு.க.,வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள இவர், ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்ற உதவிகளையும் செய்து வருகிறார்.அன்னதானத்தை இடைவிடாமல் செய்ய வேண்டும் என்பது தான் என் குறிக்கோள் என்கிறார் பாபு.இவரை பாராட்ட, 95786 69999ல்அழைக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X