நாகப்பட்டினம்-இலங்கை சிறையில் அடைப்பட்டிருந்த மீனவர்கள், நேற்று மாலை நாகை திரும்பினர். அவரது உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்
நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் , 48, சிவநேசன், 42. சகோதரர்கள். இவர்கள் உட்பட 23 மீனவர்கள் கடந்த அக்டோபர் 11 ம் தேதி, இரு விசைப் படகுகளில் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடல் பகுதியில், 13 ம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தப் போது எல்லை தாண்டியதாக, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்த அந்நாட்டு நீதிமன்றம், மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்க உத்தரவிட்டது.விடுவிக்கப்பட்ட மீனவர்களை பரிசோதனை செய்ததில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கிளிநொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்ற 18 மீனவர்களும் விமானத்தில் சென்னை வந்தவர்கள், நேற்று மாலை நாகை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மீனவர்களை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE