ராகுல் ஏன் இப்படி?

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021
Advertisement
'உண்மையாகவே தேசிய அளவில், காங்கிரசுக்கு மாற்றாக திரிணமுல் காங்கிரஸ் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விடுமோ...' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இப்போது யோசிக்கத் துவங்கியுள்ளனர்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களாக, தலைநகர் டில்லியில் முற்றுகையிட்டு முக்கியமான தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது, காங்கிரஸ்
அக்கம் பக்கம்

'உண்மையாகவே தேசிய அளவில், காங்கிரசுக்கு மாற்றாக திரிணமுல் காங்கிரஸ் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விடுமோ...' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இப்போது யோசிக்கத் துவங்கியுள்ளனர்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களாக, தலைநகர் டில்லியில் முற்றுகையிட்டு முக்கியமான தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது, காங்கிரஸ் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர், சமீபத்தில் திரிணமுல் காங்கிரசில் ஐக்கியமானது, சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை அதிர வைத்துள்ளது. 'காங்கிரஸ் மீது மம்தாவுக்கு ஏன் இவ்ளவவு கோபம்' என, முணுமுணுக்கின்றனர்.

மம்தாவுக்கு நெருக்கமானவர்களோ, 'காங்கிரஸ் தலைவர் சோனியா மீது, மம்தாவுக்கு எந்த வருத்தமும் இல்லை. ராகுல் மீது தான் கடுப்பில் உள்ளார். 'சில மாதங்களுக்கு முன் டில்லிக்கு வந்திருந்த மம்தா, சோனியாவை சந்தித்தார். ராகுலும் உடன் இருந்தார். அப்போது ராகுல், மம்தாவுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. 'இது போன்ற சில விஷயங்களால் தான், ராகுலுக்கு பாடம் புகட்டும் வகையில் தேசிய அளவில், பா.ஜ.,வை எதிர்க்கக் கூடிய ஒரே சக்தி திரிணமுல் தான் என அடிக்கடி கூறி வருகிறார்' என்கின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களோ, 'அடுத்த லோக்சபா தேர்தலிலும் நமக்கு தோல்வி தானா... ராகுலால் தான் இப்படி நடக்கிறது' என, புலம்புகின்றனர்.


முதலுக்கே மோசம்!


'எவ்வளவு தான் கட்டுப்படுத்தினாலும் இவரது வாய்க்கு கடிவாளம் போட முடியவில்லையே' என, மஹாராஷ்டிரா மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக் பற்றி புலம்புகின்றனர், தேசியவாத காங்., கட்சியினர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நவாப் மாலிக், தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்தவர்.சமீபத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பின், நவாப் மாலிக், தேசிய அளவில் பிரபலமாகி விட்டார்.

ஆர்யன் கானை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேயை தொடர்ச்சியாக விமர்சித்ததுடன், அவரது மதம், சான்றிதழ், குடும்பத்தினர் பற்றியும் தினமும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தார். இவரது அதிகபிரசங்கித் தனமான பேச்சு, கட்சி மேலிடத்துக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் அவர் தன் சர்ச்சை கருத்துக்களை நிறுத்தவில்லை.

நிலைமை மோசமாகி, மும்பை உயர் நீதிமன்றமே இவரது பேச்சுக்கு கடிவாளம் போட வேண்டியதாகி விட்டது. தேசியவாத காங்., மூத்த தலைவர்களோ, 'ஏற்கனவே எங்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆகியவை சரியான வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. நவாப் மாலிக்கால், முதலுக்கு மோசம் வந்து விடும் போலிருக்கிறதே' என, கவலையில் ஆழ்ந்துள்ளனர்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X