மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்-''மும்பை தாக்குதல் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,'' என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் வலியுறுத்தியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008 நவம்பர் 26ல் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வின் 13ம் ஆண்டு நினைவு தினம் அமெரிக்காவில்

வாஷிங்டன்-''மும்பை தாக்குதல் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,'' என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் வலியுறுத்தியுள்ளார்.



latest tamil news


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008 நவம்பர் 26ல் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வின் 13ம் ஆண்டு நினைவு தினம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் கூறியதாவது:மும்பை தாக்குதல் நடந்து 13 ஆண்டுகள் ஆகி விட்டன.

இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் ஆறு பேர் உட்பட 166 பேர் பலியானதையும், இந்த சோகத்தில் இருந்து மீண்டெழுந்த மும்பை மக்களையும் இந்நாளில் நினைவு படுத்துகிறோம்.நீண்ட காலம் ஆகியும் மும்பை தாக்குதலுக்கு காரணமானோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் உள்ளனர். விரைவில் இந்த வழக்கு விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


மும்பை தாக்குதலின் நினைவு தினம், வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய துாதரகத்தில் அனுசரிக்கப்பட்டது.இதில் வெளியுறவு துறை இணை அமைச்சர் வென்டி ஷெர்மன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறை துணைச் செயலர் ஜெனிபர் லார்சன் மற்றும் துாதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-நவ-202105:47:31 IST Report Abuse
NicoleThomson அன்று அவர்களுக்கு அடைக்கலம் அளித்தது இதே அமேரிக்கா தானே?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
28-நவ-202110:32:10 IST Report Abuse
 Muruga Velஎன்ன உளறல் .....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-நவ-202102:01:29 IST Report Abuse
M  Ramachandran முபைதாக்குதல் மூல கரணம் தீவிரா வாதிகளாய் ராணுவத்தின் உதவி கொண்டு வளர்ப்பது பாகிஸ்தான் தான். அவனை அமெரிக்கா தண்டிக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X