பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் பக்தர்களை எட்டு மணி நேரம் தங்க வைப்பது குறித்து தேவசம் போர்டு ஆலோசனை

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021
Share
Advertisement
சபரிமலை-சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களை எட்டு மணி நேரம் தங்க வைப்பது மற்றும் பக்தர்களே நெய்யபிஷேகத்துக்கு நெய் எடுத்துச் செல்ல அனுமதிப்பது உள்ளிட்ட விஷயங்களில் தேவசம்போர்டு தீவிர பரிசீலனை செய்துவருகிறது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா பாதித்த பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்ததால்,

சபரிமலை-சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களை எட்டு மணி நேரம் தங்க வைப்பது மற்றும் பக்தர்களே நெய்யபிஷேகத்துக்கு நெய் எடுத்துச் செல்ல அனுமதிப்பது உள்ளிட்ட விஷயங்களில் தேவசம்போர்டு தீவிர பரிசீலனை செய்துவருகிறது.



latest tamil news


கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா பாதித்த பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்ததால், சீசன் துவக்கம் முதல், செங்குத்தான நீலிமலை பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சுவாமி அய்யப்பன் ரோடு வழியாக சென்று வருகின்றனர். இந்த சாலையில் டிராக்டர்களும் இயக்கப்படுவதால் சிரமங்கள் உள்ளன. சீரமைப்பு பணிகள்மேலும் அப்பாச்சிமேட்டில் மாவு உருண்டை எறிதல், சபரி பீடத்தில் வெடிவழிபாடு நடத்துதல், சரங்குத்தில் சரக்கோல் ஊன்றுதல் போன்ற பாரம்பரிய சடங்குகள் நீலிமலை பாதையில் உள்ளதால் பக்தர்களுக்கு இது ஒரு குறையாக இருந்தது.

இதனால் இந்த பாதை வழியாக ஓரிரு நாட்களில் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு நீலிமலை மற்றும் அப்பாச்சிமேட்டில் இதய நோய் மருத்துவமனை கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுஉள்ளன. இதுபற்றி தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியதாவது: அனைத்து பக்தர்களுக்கும் நல்ல தரிசனம் கிடைப்பதை தேவசம்போர்டு உறுதி செய்யும். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.நீலிமலை பாதையில் செல்வதற்கான ஏற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுபக்தர்கள் அதிக பட்சம் எட்டு மணி நேரம் சன்னிதானத்தில் தங்கவும், அவர்களே நெய்யபிஷேகத்துக்கு நெய் எடுத்துச் செல்லவும் வசதி செய்வது தேவசம்போர்டின் முக்கிய பரிசீலனையில் உள்ளது.


latest tamil news


எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கான வசதிகள் செய்ய தேவசம்போர்டு தயாராக உள்ளது. கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் சபரிமலை கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேரள அரசை வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X