போதைப் பொருள் கடத்தல் வழக்கு: இந்தியர்களுக்கு தூக்கு உறுதி

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சிங்கப்பூர்-போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் மூன்று பேரின் மரண தண்டனையை, சிங்கப்பூர் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு 2016ம் ஆண்டு மலேஷியாவில் இருந்து, கமல்நாதன் முனியாண்டி மற்றும் பிரவினாஷ் சந்திரன் என்ற இரண்டு இந்திய வம்சாவளியினர் வந்தனர்.1.3 கிலோஇதில், பிரவினாஷ் வைத்திருந்த பையில் போதைப்

சிங்கப்பூர்-போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் மூன்று பேரின் மரண தண்டனையை, சிங்கப்பூர் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.



latest tamil news


தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு 2016ம் ஆண்டு மலேஷியாவில் இருந்து, கமல்நாதன் முனியாண்டி மற்றும் பிரவினாஷ் சந்திரன் என்ற இரண்டு இந்திய வம்சாவளியினர் வந்தனர்.1.3 கிலோஇதில், பிரவினாஷ் வைத்திருந்த பையில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.இங்குள்ள கிரான்ஜி ரயில் நிலையத்திற்கு அருகே, சந்துரு சுப்ரமணியன் என்ற மற்றொரு இந்திய வம்சாவளியை அவர்கள் சந்தித்துள்ளனர். அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


அவர்களிடம் இருந்த 1.3 கிலோ எடையிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கமல்நாதன் மற்றும் சந்துரு இந்த சதித் திட்டத்தை தீட்டியதும், போதைப் பொருளை எடுத்து வரும் பணிக்காக பிரவினாஷை அவர்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது.சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கமல்நாதன் மற்றும் சந்துருவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.பிரவினாஷுக்கு ஆயுள் தண்டனையுடன், 15 பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டது.இவர்கள் மூவரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், கமல்நாதன் மற்றும் சந்துருவின் மரண தண்டனையை மீண்டும் உறுதிப் படுத்தியது.


மேல்முறையீடு

மேலும், பிரவினாஷ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதற்கிடையே, 52 கிலோ 'ஹெராயின்' கடத்தப்பட்ட வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, பன்னீர்செல்வம் பரந்தாமன் என்ற இந்திய வம்சாவளி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அதையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
canchi ravi - Hyderabad,இந்தியா
28-நவ-202114:41:14 IST Report Abuse
canchi ravi இந்தியாவிலும் இதைபோல் தண்டனை வழங்கவேண்டும்.
Rate this:
Cancel
Radja - Singapore,சிங்கப்பூர்
28-நவ-202112:15:06 IST Report Abuse
Radja சிங்கப்பூர் சட்டங்களை மதிக்கவேண்டும்.சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போலீஸ் எல்லாருக்கும் பொது.
Rate this:
Cancel
Siva Panchalingam - Toronto,கனடா
28-நவ-202108:02:10 IST Report Abuse
Siva Panchalingam எய்தவன் இருக்க அம்பினை பிடித்து என்ன பிரயோசனம்"? சிங்கப்பூருக்குள் காவிக்கொண்டு சென்று பிடிபட்டவர்கள் கூலிக்கு பணி புரியும் அப்பாவிகளாகவே இருப்பார்கள். பின்னல் நின்று இவர்களை பயன்படுத்திய சட்ட விரோத துரோகி எங்கேயோ மறைந்திருப்பான். விளைவு எப்படியிருக்கும் என புரிந்துகொள்ள தெரியாது கூலிக்கு பணி புரிந்தவர்கள் தண்டனைக்கு பலியாகின்றனர். இது அவர்களின் தலைவிதி.
Rate this:
28-நவ-202110:30:04 IST Report Abuse
அப்புசாமிஅம்புகள் எண்ணிக்கையில் நாலு குறையட்டும். எய்தவன் என்னிக்காவது புடிபடுவான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X