சிங்கப்பூர்-போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் மூன்று பேரின் மரண தண்டனையை, சிங்கப்பூர் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு 2016ம் ஆண்டு மலேஷியாவில் இருந்து, கமல்நாதன் முனியாண்டி மற்றும் பிரவினாஷ் சந்திரன் என்ற இரண்டு இந்திய வம்சாவளியினர் வந்தனர்.1.3 கிலோஇதில், பிரவினாஷ் வைத்திருந்த பையில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.இங்குள்ள கிரான்ஜி ரயில் நிலையத்திற்கு அருகே, சந்துரு சுப்ரமணியன் என்ற மற்றொரு இந்திய வம்சாவளியை அவர்கள் சந்தித்துள்ளனர். அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த 1.3 கிலோ எடையிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கமல்நாதன் மற்றும் சந்துரு இந்த சதித் திட்டத்தை தீட்டியதும், போதைப் பொருளை எடுத்து வரும் பணிக்காக பிரவினாஷை அவர்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது.சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கமல்நாதன் மற்றும் சந்துருவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.பிரவினாஷுக்கு ஆயுள் தண்டனையுடன், 15 பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டது.இவர்கள் மூவரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், கமல்நாதன் மற்றும் சந்துருவின் மரண தண்டனையை மீண்டும் உறுதிப் படுத்தியது.
மேல்முறையீடு
மேலும், பிரவினாஷ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதற்கிடையே, 52 கிலோ 'ஹெராயின்' கடத்தப்பட்ட வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, பன்னீர்செல்வம் பரந்தாமன் என்ற இந்திய வம்சாவளி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அதையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE