‛ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கு: சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆஜராக 'சம்மன்'

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி-ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கு, டில்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகனும், எம்.பி., யுமான கார்த்தி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பி உள்ளது.மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் 2006ல் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது ஏர்செல் - மேக்சிஸ்

புதுடில்லி-ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கு, டில்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகனும், எம்.பி., யுமான கார்த்தி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பி உள்ளது.



latest tamil news


மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் 2006ல் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அன்னிய முதலீட்டு வாரியம் அனுமதி அளித்தது.இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி சிதம்பரம், அவரது மகனும், லோக்சபா எம்.பி.,யுமான கார்த்தி, முன்னாள் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது டில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


latest tamil news


இந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அடுத்த மாதம் 20ம் தேதி நேரில் ஆஜராக 'சம்மன்' அனுப்பும்படி நீதிபதி எம்.கே.நாக்பால் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-202115:57:31 IST Report Abuse
Srirajan Cbe 0 😊☺️😭😩😔
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-202114:49:04 IST Report Abuse
ram அட இதுங்கதான் திருடன்னு நல்லாவே இந்த உலகத்துக்கே தெரியும். ஏன் இந்த கால தாமதம் சோலியே முடிச்சு விடுங்காப்பா..
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-நவ-202114:25:23 IST Report Abuse
M  Ramachandran மூஞ்சியை பார்த்தல் உத்தம புத்திரர்கள் போல் வைத்துக் கொள்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X