போலி ஆவண மோசடி; 'மாஜி' மந்திரிக்கு வாரன்ட்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021
Share
Advertisement
கோட்டா-அரச குடும்பத்தின் சொத்துக்கு போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உட்பட மூன்று பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அவினாஷ் குமார் சந்த்னா. இவர் 2017ல் போலீசில் கொடுத்த புகாரில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான

கோட்டா-அரச குடும்பத்தின் சொத்துக்கு போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உட்பட மூன்று பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அவினாஷ் குமார் சந்த்னா. இவர் 2017ல் போலீசில் கொடுத்த புகாரில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான ஜிதேந்திர சிங், அவரது மாமனார் பிஜேந்திர சிங், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட நிர்வாகி ஸ்ரீநாத் சிங் ஆகியோர் அரச குடும்ப சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயாரித்து விற்றதாக புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணையின் போது போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.


latest tamil news


இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த ஜிதேந்திர சிங் உட்பட மூவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி, ஜன., 6க்குள் மூவரையும் கைது செய்து ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.ஆல்வார் அரச குடும்பத்தின் கடைசி மன்னரான பகதுார் சிங் மகன் ரஞ்சித் சிங்கின் மருமகன் தான் ஜிதேந்திர சிங்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X