சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'தனி சட்டம் இயற்ற வேண்டும்!'

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (2)
Advertisement
முனைவர் சாந்தகுமாரி, வழக்கறிஞர், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர்:திருமண உறவில் பாலியல் பலாத்காரம் குற்றமல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கும், 32 உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் நாட்டில் அது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது, தண்டனை சட்டம் அல்ல. எனவே, 'மெரிட்டல் ரேப்' என்பதை குற்றமயமாக்க வேண்டும். இதற்கான, ஐ.நா.,வின்
சொல்கிறார்கள்

முனைவர் சாந்தகுமாரி, வழக்கறிஞர், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர்:
திருமண உறவில் பாலியல் பலாத்காரம் குற்றமல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கும், 32 உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் நாட்டில் அது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது, தண்டனை சட்டம் அல்ல. எனவே, 'மெரிட்டல் ரேப்' என்பதை குற்றமயமாக்க வேண்டும். இதற்கான, ஐ.நா.,வின் தீர்மானத்தில் பல நாடுகளுடன் இந்தியாவும் கையெழுத்திட்டும், இந்திய தண்டனை சட்டத்தில் அதற்கான மாற்றத்தை ஏற்படுத்தப்படவில்லை.

'மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் பலவந்தமாக உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமை ஆகாது' என்று சமீபத்தில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நம் நீதி அமைப்புக்கு, சில நீதிபதிகளுக்கு, முதலில் பாலின சமத்துவம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமண தடுப்பு சட்டப்படி ஒரு சிறுமி பூப்படைந்திருந்தாலும், 18 வயதுக்குள் அவருக்கு திருமணம் முடிப்பது சட்டப்படி குற்றம்.

ஆனால், ஓர் ஆண், 16 வயது சிறுமியை திருமணம் செய்து உறவு கொண்டால் அது குற்றமில்லை என்று இந்திய தண்டனை சட்டம் வரையறுக்கிறது. அதை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.மேலும், மைனர் சிறுமியை திருமணம் செய்த கணவர் தான் அவருக்கு பாதுகாப்பாளர் என்று இந்திய பாதுகாப்பாளர் சட்டம் சொல்கிறது.

குற்றவாளியையே பாதுகாப்பாளராக சேர்க்கும் இந்தச் சட்டம், திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியவற்றுள் முக்கியமான ஒன்று.இப்படி குழந்தை திருமணம் தொடர்பான பல்வேறு சட்டப்பிரிவுகளில் உள்ள அம்சங்கள் ஒன்று, வேறுபட்டு குற்றவாளியைக் காக்கும்படி அமையும் கூறுகளை சீர்செய்து, குழந்தை திருமணங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

ஜாதி வெறியால் நிகழும் ஆணவ கொலைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பெண்களை பார்த்திருக்கிறோம். பெண்ணின் மீது குடும்ப மானம், ஜாதி என்ற பெயரில் வைக்கும் ஆணாதிக்கம், இந்தப் பிரச்னையின் வேரிலும் உள்ளது. ஆணவ கொலைகளை தடுக்கும் தனிச்சட்டம் முக்கிய கோரிக்கை. அதற்கான மசோதா தயாரானாலும், அதை இன்னும் நிறைவேற்றவில்லை.
மத்திய அரசு தான் இதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றில்லை. மாநில அரசே சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து சிறப்பு சட்டம் இயற்றலாம். தேசிய குற்றப் பதிவேட்டின்படி, தமிழகத்தில் ஆணவ கொலைகளின் எண்ணிக்கை குறைவு. உண்மையில், தென் மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் ஆணவ கொலைகள் அதிகளவு நடக்கின்றன. சமூக நீதியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ள நாம், ஆணவக் கொலை தடுப்புக்கு தனிச்சட்டம் இயற்றி, மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக வேண்டும்!


சாப்பாட்டு பிரியர்களே புட்டீஸ்!


புதிய தொழிலில் ஈடுபடும் நம் இளைஞர்கள் குறித்து கூறுகிறார், முனைவர் சுடர்க்கொடி கண்ணன்: பசிக்காக உண்ணாமல் ருசிக்காக உண்ணுபவர்கள் இந்த 'புட்டீஸ்!' பல இடங்களுக்கும் சென்று உணவை ருசி பார்த்து 'வீடியோ'க்களாக்கி, 'யுடியூப்' உள்ளிட்ட சமூக ஊடகங்களில், 'அப்லோடு' செய்யும் புட்டீஸ் பெருகி விட்டனர்.

சமூக ஊடகங்களில் சிறப்பாக இயங்கிவரும் இந்த புட்டீஸ், விதவிதமாக சாப்பிடுவதற்காகவே ஓட்டல் ஓட்டலாக செல்கின்றனர். தஹி பூரி சாப்பிடுவதற்காக 'ஸ்ட்ரீட் புட்' பிரியர்களின் சொர்க்கபூமியான டில்லிக்கு கூட தயங்காமல் செல்வர் இந்த புட்டீஸ்.

இன்னும் சொல்லப் போனால் ஒரு உணவுக்காக ஓராயிரம் கி.மீ., செல்லவும் தயங்க மாட்டார்கள். ஸ்மார்ட் போன்களின் தொடுதிரைகள் மூலம் பல்வேறு உணவு வகைகளையும், அவை கிடைக்கும் முக்கிய இடங்களின் வீடியோக்களாக்கிப் பதிவேற்றுகின்றனர்.தங்களுடைய சமூக வலைதளங்களை வருமானம் ஈட்டக்கூடிய தளமாகவும் இவர்கள் மாற்றம் செய்கின்றனர்.

தங்களின் வலைதளங்களில் அவற்றின் லிங்க்கை கொடுத்து, குறிப்பிட்டு ஓட்டல்களை பரிந்துரைப்பதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கின்றனர். இதை தொழிலாக செய்யும் புட்டீசும் உள்ளனர். கரும்பு தின்ன கூலியும் பெறுவது போல, விளம்பரங்கள் மூலமும் பணமும் சம்பாதிக்கின்றனர்

.தொழிலாக செய்யும் புட்டீஸ் அதிக வருமானம் ஈட்டுவதை பார்க்கும் மற்ற புட்டீசும் இதையே பின்பற்ற ஆரம்பித்துள்ளதால், புட்டீசின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புட்டீஸ் பெரும்பாலும் காசு கொடுத்தே உணவை வாங்கி சாப்பிடுவதால் உணவு சரியாக இல்லை என்றாலும் அதை அப்படியே தங்களின் வீடியோக்களில் புட்டுப் புட்டு வைத்து விடுகின்றனர்.

ரோட்டோர கடைகளில் மட்டுமல்ல, மிகப் பெரிய நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் புட் பஜார்களில் இந்த புட்டீஸ் கலந்து, அன்லிமிடெட் உலக விருந்து, கையடக்க விலையில் கிடைப்பதையும் வீடியோக்களாக்கி பதிவேற்றுகின்றனர்.

இந்த புட்டீஸ், எப்போது வீடியோ அப்லோடு செய்வர் என்று காத்திருந்து வீடியோவை பார்வையிடும் அளவுக்கு மக்கள் இவர்களை பின்பற்றுகின்றனர். இவர்களின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது.

ஒவ்வொரு புட்டீசையும் பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே செல்கிறது. புட்டீசின் வீடியோ 'நோட்டிபிகேஷனுக்காக' காத்திருந்து வீடியோவை பார்வையிடும் பார்வையாளர்களும் இருக்கின்றனர். ஒவ்வொரு புட்டீசும், 1,000 முதல் லட்சக்கணக்கில் பின்தொடர்வோரை கொண்டிருக்கின்றனர்.

புதுப்புது இடங்களில் புதிய வகை உணவுகளை உண்ண விரும்பும் உணவின் உண்மை காதலர்கள், இன்றைய இளைஞர்கள். இவர்கள் ருசியோடு, ஆரோக்கிய உணவிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர். ஆரோக்கியமான உணவுகள் குறித்தும் இவர்கள் வீடியோக்கள் பதிவேற்றம் செய்கின்றனர். உணவோடு உறவாடும் இந்த புட்டீஸ் நன்றாக சாப்பிடுவதோடு, நன்றாக சம்பாதிக்கவும் செய்கின்றனர்!Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
28-நவ-202120:41:43 IST Report Abuse
spr "திருமண உறவில் பாலியல் பலாத்காரம் குற்றமல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கும், 32 உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் நாட்டில் அது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது, தண்டனை சட்டம் அல்ல. எனவே, 'மெரிட்டல் ரேப்' என்பதை குற்றமயமாக்க வேண்டும். இதற்கான, ஐ.நா.,வின் தீர்மானத்தில் பல நாடுகளுடன் இந்தியாவும் கையெழுத்திட்டும், இந்திய தண்டனை சட்டத்தில் அதற்கான மாற்றத்தை ஏற்படுத்தப்படவில்லை." என்று சொல்லும் இவர் அண்மையில் வெளியான வரலாறு காணாத தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறாரா? "கள்ள உறவில் ஈடுபடுவது குற்றமென்றால் அங்கே உறவு வைத்த ஆணுக்கு மட்டும் தண்டனை தருவது முறையல்ல என்றும் கணவனின் சுயநலத்திற்காக அவன் மனைவி இன்னொரு ஆடவனுடன் கள்ள உறவு வைத்துக் கொள்ள, அவனால் கட்டாயப்படுத்துவது, ஆணுக்குப் பெண் அடிமை என்றாகிறது அக்கணவனை சட்டப்படி தண்டிக்க வழி தேவை என இருவேறு வழக்குகள் தொடங்கப்பட்டன. அவ்வுறவு குற்றம் எனும் வகையில் இருவருமே தண்டிக்கபட வேண்டுமென்றோ, பெண்ணைக் கட்டாயப்படுத்தும் கணவனைத் தண்டிக்க வேண்டுமென்றோ நம் நீதிபதிகள் சொல்லவில்லை. இவ்விரு செய்கைகளும் சரியல்ல என்று தொடங்கப்பட்ட இவ்வழக்குகள் சட்டம் குறித்த அறிவு மட்டுமே உடைய, சமுதாய சிந்தனையற்ற நம் நீதிபதிகளால் மடைமாற்றப்பட்டு, இப்பொழுது அந்த திருமணமெனும் ஒப்பந்தம் ரத்து பெறாமலேயே கணவனோ மனைவியோ பிறருடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் சட்டப்படி குற்றமல்ல அது தவறில்லை எனத் தீர்ப்பளித்திருக்கிறது. அந்த வகையில், (கள்ள) உறவு கொள்ளும் தங்கள் கணவர் பேரில் அவர் மனைவி குற்ற நடவடிக்கை எடுக்க இனி சட்டப்படியும் இயலாது. இது திருமணமென்னும் புனிதமான சடங்கை வெற்றுச் செயலாக மாற்றுகிறது. ஆனால் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும் எனும் நிலை இன்னமும் தொடர்கிறது. மணமுறிவு பெறவும் பல கட்டுப்பாடுகள் இருக்கிறது இவ்வாறு பெண்கள் இனி ஆண்களின் அடிமையல்ல என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் சட்டங்களும், மறைமுகமாக ஆண்களுக்கே உதவுகின்றன. இத்தீர்ப்பால் பலன் பெற்ற பல ஆண்கள் பாராட்டலாம்.அது இயல்பே ஆனால், இதனைப் பெண்ணுரிமை இயக்கங்களும் எதிர்க்கவில்லை என்பது வியப்புக்குரிய ஒன்றே.- இந்த தீர்ப்பு வெளியாகும் போது எங்கிருந்தார்? சட்டங்களால் எந்த மாற்றமும் உண்டாகாது அதனை சட்டத்தின் ஓட்டைகளை அறிவதே நோக்கமென்று செயல்படும் ஒரு சட்ட வல்லுநர் உடைத்தெறிவார் அவர்களின் வாதங்களால் மனமாற்றம் அடையும் நீதிபதியும் குற்றவாளியை விடுவிப்பார் எனவே சட்டத்துடன் சமுதாய மாற்றமே நலம் தரும்
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
28-நவ-202101:32:05 IST Report Abuse
Desi 99% it will be misused like 498a and DV act 2005. Qualified men would prefer to be single.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X