பெங்களூரு விமானத்தில் இயந்திர கோளாறு: நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021
Share
Advertisement
நாக்பூர்-பெங்களூரில் இருந்து பாட்னா சென்ற விமானம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து, நேற்று காலை பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு 'கோ ஏர்' தனியார் விமானம் 139 பயணியர் மற்றும் ஊழியர்களுடன் புறப்பட்டது. நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அருகில் இருந்த

நாக்பூர்-பெங்களூரில் இருந்து பாட்னா சென்ற விமானம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.



latest tamil news


கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து, நேற்று காலை பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு 'கோ ஏர்' தனியார் விமானம் 139 பயணியர் மற்றும் ஊழியர்களுடன் புறப்பட்டது. நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அருகில் இருந்த மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இதையடுத்து அங்கு, பாதுகாப்பாக விமானத்தை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த விமானம் நாக்பூரில் மிகவும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், டாக்டர்கள் தயார் நிலையில் இருந்தனர். அதில் இருந்த பயணியருக்கு மாற்று விமான ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X