பொது செய்தி

தமிழ்நாடு

அபராதமின்றி மின்கட்டணம்: இன்னும் 2 நாட்கள் தான் அவகாசம்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை-மழை காரணமாக, அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம் வழங்கிய அவகாசம் முடிய இரு தினங்களே உள்ளன.தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுத்த தேதியில் இருந்து, 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை நுகர்வோர்கள் செலுத்த வேண்டும். இல்லையேல், மின் வினியோகம் துண்டிக்கப்படும்.பின், அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும் மின்சாரம்

சென்னை-மழை காரணமாக, அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம் வழங்கிய அவகாசம் முடிய இரு தினங்களே உள்ளன.



latest tamil news


தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுத்த தேதியில் இருந்து, 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை நுகர்வோர்கள் செலுத்த வேண்டும். இல்லையேல், மின் வினியோகம் துண்டிக்கப்படும்.பின், அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும் மின்சாரம் வழங்கப்படும்.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இம்மாதம் 6ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு கன மழை பெய்தது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.எனவே, கட்டணம் செலுத்த, மின் வாரியம் அவகாசம் அளித்தது.இதன்படி, நான்கு மாவட்டங்களில் வசிப்போர், மின் கட்டணம் செலுத்த, 8 முதல் 15ம் தேதி வரை கடைசி நாளாக உள்ளவர்களுக்கு, கூடுதலாக 15 தினங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டது.


latest tamil news


மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி, 16 முதல் 29ம் தேதி வரை உள்ளவர்கள், 30ம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. மின் கட்டண மையங்களில், கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிய இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ளன. இணையதளம் உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்த, இன்று முதல் மூன்று நாட்களுக்கு அவகாசம் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
28-நவ-202118:52:03 IST Report Abuse
DVRR எனக்கு ஒரு வாட்ஸ் ஆப் வந்தது அதில் 100 யூனிட்டுக்கு குறைவாக இருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை. 250 யூனிட்டுக்கு ரூ 350 மட்டும் தான் என்று போட்டிருந்தது இங்கு நான் 240 யூனிட்டுக்கு ரூ 1980 செலுத்துகின்றேன். அவ்வளுவு சீப்பா அப்படின்னா மின்சாரத்துறையின் கடனை ரூ 1.2 லட்சம் கோடி எப்போது தான் தீர்க்கப்போகின்றது இந்த டாஸ்மாக் நட்டு அரசு
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
28-நவ-202114:10:42 IST Report Abuse
Loganathan Kuttuva பழைய மீட்டர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X