பொது செய்தி

இந்தியா

விவசாய சட்ட ரத்து மசோதா நாளை தாக்கல்; முக்கிய பிரச்னைகளை ஆராய குழு அமைப்பு

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, பார்லிமென்டில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.விவசாயிகள் நலன், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக ஆராய, விவசாய பிரதிநிதிகளும் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளதாகவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புசர்ச்சைக்குரிய

புதுடில்லி-சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, பார்லிமென்டில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.



latest tamil news



விவசாயிகள் நலன், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக ஆராய, விவசாய பிரதிநிதிகளும் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளதாகவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புசர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார்.

நாளை துவங்கும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் டில்லி எல்லையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய வேளாண் அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் நேற்று கூறியதாவது:விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும். இதில் விவசாயப் பிரதிநிதிகளும் இடம்பெறுவர். விவசாயிகளின் நலன், பலதரப்பட்ட பயிர்கள் பயிரிடுவது, குறைந்தபட்ச ஆதார விலையில் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்படும். பயிர் இழப்பீடுவைக்கோல் எரிப்பதை குற்றமாக்குவது கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படுகிறது.

விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதால், போராட்டத்தை கைவிட்டு அவர்கள் வீடு திரும்ப வேண்டும்.போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மாநில அரசுகள் வழக்கு பதிவு செய்துள்ளதால், அது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்ய முடியும். பயிர் இழப்பீடு குறித்தும் மாநிலங்களே முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பேரணி ரத்துகோரிக்கைகளை வலியுறுத்தி குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நாளை, பார்லிமென்ட் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.


latest tamil news


இந்நிலையில் அந்தப் பேரணியை ரத்து செய்வதாக, முக்கிய விவசாய சங்கமான சம்யுக்த் கிஸான் மோர்ச்சா நேற்று அறிவித்துள்ளது.பார்லி., கூட்டத் தொடரின் முதல் நாளில், விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக கூட்டத் தொடரில் அனைத்து எம்.பி.,க்களும் பங்கேற்க வேண்டும் என, பா.ஜ., சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-நவ-202106:16:43 IST Report Abuse
Kasimani Baskaran நிபுணர் குழுவை நினைத்தால் டக்ளஸ் ஞாபகம் வந்து தொலைக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X