பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: உயிரே உன் விலை என்ன!

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எம்.கோபால், பறக்கை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் சமம்; இதில் ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது.அந்த உயிர் போவதும் ஒரு முறை தான். அது, இயற்கையாக, நோயால், விபத்தால், இயற்கை பேரிடரால், கொலையால், தற்கொலையால் நிகழலாம்.ஆக, அனைத்தும்
இது, உங்கள், இடம், உயிர்,விலை,என்ன


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எம்.கோபால், பறக்கை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் சமம்; இதில் ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது.அந்த உயிர் போவதும் ஒரு முறை தான். அது, இயற்கையாக, நோயால், விபத்தால், இயற்கை பேரிடரால், கொலையால், தற்கொலையால் நிகழலாம்.ஆக, அனைத்தும் மரணங்கள் தான்.இயற்கை பேரிடர், விபத்து, கொலை ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு, மாண்டவர் குடும்பத்தினருக்கு நிவாரணமும், வேலை வாய்ப்பும் வழங்குவதை அரசு வாடிக்கையாக்கி வைத்துள்ளது.

சமீபத்தில், திருச்சி எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் என்பவர், ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.இவரது மரணத்திற்கு ஈடு செய்யும் வகையில், பூமிநாதன் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து, 1 கோடி ரூபாய் நிதியுதவியும், பூமிநாதன் மகனுக்கு வாரிசு வேலையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து சேலத்தில், காஸ் சிலிண்டர் வெடித்து ஆறு வீடுகள் தரைமட்டமானதோடு, தீயணைப்பு நிலைய அதிகாரி பத்மநாபன் உட்பட ஐந்து பேர் இறந்தனர்.இந்த விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு, தலா, 5 லட்ச ரூபாய் நிவாரண தொகையும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


பூமிநாதன், காவல் துறையில் பணியாற்றியவர். பத்மநாபன், தீயணைப்பு துறையில் பணியாற்றியவர். இருவருமே, அரசு துறை பணியாளர்களே!இவர்களில் ஒருவரின் குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் நிவாரண நிதி; மற்றொருவருக்கு, வெறும், 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி. இரண்டுக்கும் இடையே எவ்வளவு ஏற்றத்தாழ்வு? ஏன் இந்த முரண்பாடு?இந்த இரண்டு மரணங்களில் மட்டுமில்லை. இதற்கு முன் அரசு வழங்கிய, அனைத்து மரணங்களுக்கான நிவாரண நிதியும் இப்படித் தான் இருந்திருக்கிறது.இந்த நிதியுதவியை, எந்த வகையில் கணக்கிடுகின்றனர் என்பதே, புரியாத புதிராக உள்ளது

.தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்கும் முறையை பார்த்தால், உயிரே... உண்மையில் உன் விலை தான் என்ன என கேட்கத் தோன்றுகிறது.அரசு, தான் தோன்றித்தனமாக நிவாரண நிதி வழங்குவதை நிறுத்தி, அதற்கு ஒரு வரைமுறை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-நவ-202101:51:58 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு அரசு ஊழியனால் எவ்வளவு லஞ்சம் வாங்கமுடியுமோ அதற்கு தகுந்தாற்போல் தான் இழப்பீடும். RTO, POLICE, REVENUE, PWD போன்ற துறை ஊழியர்கள் இறந்தால் இழப்பீடும் மிக அதிகமாகவே வழங்கப்படும். அரசு பேருந்து நடத்துனர் ஓட்டுனர் என்றால் ஒரு லட்சம் இழப்பீடுகூட அதிகம்தான். அரசு ஊழியர் இல்லை என்றால் பத்தாயிரம்கூட போதுமானதுதான்.
Rate this:
Cancel
arun -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-202119:30:40 IST Report Abuse
arun ithu antha uyireoda sothu mathipu porathathu
Rate this:
Cancel
சிவா - Aruvankadu,இந்தியா
28-நவ-202114:30:06 IST Report Abuse
சிவா அரசு வேலை அல்லது நிவாரண பணம் வழங்க வேண்டும். என்று அன்பு கலந்த வணக்கங்கள் கலந்த பாசமும் கலந்து தெரிவித்து கொள்ள நான் விருப்ப பட வில்லை. தகுதி என்று ஒன்று இருப்பது திராவிட கட்சிகள் கேள்வி படாத விக்ஷயம். ஆக .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X