பொது செய்தி

இந்தியா

உடல் உறுப்பு தானம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி,-''உடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்,'' என, மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.உடல் உறுப்பு தான நாள் விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சையில் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

புதுடில்லி,-''உடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்,'' என, மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.latest tamil newsஉடல் உறுப்பு தான நாள் விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சையில் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில், 2013ம் ஆண்டில் 4,990 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன; இது, 2019ம் ஆண்டில், 12ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் உறுப்பு தான விகிதமும் நான்கு மடங்கு உயர்ந்து உள்ளது. எனினும் உறுப்பு தானத்தை விட, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் மாற்று உறுப்பு தேவைப்படுவோருக்கும், இறந்தவர்களின் உடல் உறுப்புகள் கிடைப்பதற்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது. துரதிருஷடவசமாக கொரோனாவால் தற்போது உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்கை உள்ளிட்டவை குறித்து எதிர்மறை கருத்துகள் பரவியுள்ளன. இந்த நிலை விரைவில் மாறும் என நம்புகிறோம்.


latest tamil newsமக்கள் தாராளமாக உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வர வேண்டும். மாற்று உடல் உறுப்புகளுக்கு உள்ள பற்றாக்குறை குறித்த செய்திகளை பரப்ப வேண்டும். மக்களிடம் உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
er -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-202121:33:20 IST Report Abuse
er it is tool for big corporate hospitals to loot organs of unknown to make huge money, and sell to the he people who are affordable, and some
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-நவ-202117:57:31 IST Report Abuse
DVRR இந்த டப்ப்பா தட்டுதல் அனாவசியமானது. எனது உறுப்பை நான் உயிருடன் இருக்கும்போது கொடுக்க எனக்கு முழு உரிமையும் உள்ளது, இணைந்தது நிலைமை பொறுத்து அதை நான் முடிவு செய்வேன். ஒரு சட்டம் கொண்டு வாருங்கள் டப்பா அடிக்காமல். சட்டம்-"ஒருவர் விபத்திலோ அல்லது அகாலமாகவோ மரணமடைந்தால் அவரின் உறுப்புக்கள் அவர்கள் உறவினர்களுக்கு சொல்லிவிட்டு (அவர்கள் சம்மதம் இதற்கு தேவை இல்லை) அந்த உறுப்புகளை உடனே எடுத்து மற்ற நோயாளிகளுக்கு பொருத்தப்படும்?? இறந்தவரின் வயது வரம்பு 10 முதல் 55 வரை மட்டுமே"
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
28-நவ-202111:19:45 IST Report Abuse
Rajalakshmi ஹிந்துக்களின் தர்ம சாஸ்திரங்களும் ஒருவர் இறந்தபின் அவரது உடம்பை அப்படியே அக்னிபகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது . உறுப்புகள் எதையும் நீக்க கூடாது .
Rate this:
28-நவ-202112:48:27 IST Report Abuse
ஆரூர் ரங்கண்ணப்ப நாயனார் இறைவனின் அருவுருவமாகிய. லிங்கத்துக்கு🙏 தனது கண்களையே கொடுத்ததும் அதனால் அவருக்குப் சிவலோக🖐 பிராப்தி கிடைத்ததும் புராணம். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கண்சிகிச்சைத்துறை முகப்பில் கண்ணப்பரின் கண்தானத்தை சித்திரிக்கும் படமாக வைத்துள்ளார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X