புதுடில்லி,-''உடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்,'' என, மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

உடல் உறுப்பு தான நாள் விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சையில் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில், 2013ம் ஆண்டில் 4,990 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன; இது, 2019ம் ஆண்டில், 12ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் உறுப்பு தான விகிதமும் நான்கு மடங்கு உயர்ந்து உள்ளது. எனினும் உறுப்பு தானத்தை விட, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் மாற்று உறுப்பு தேவைப்படுவோருக்கும், இறந்தவர்களின் உடல் உறுப்புகள் கிடைப்பதற்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது. துரதிருஷடவசமாக கொரோனாவால் தற்போது உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்கை உள்ளிட்டவை குறித்து எதிர்மறை கருத்துகள் பரவியுள்ளன. இந்த நிலை விரைவில் மாறும் என நம்புகிறோம்.

மக்கள் தாராளமாக உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வர வேண்டும். மாற்று உடல் உறுப்புகளுக்கு உள்ள பற்றாக்குறை குறித்த செய்திகளை பரப்ப வேண்டும். மக்களிடம் உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE