பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 12வது மெகா தடுப்பூசி முகாம்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் 12வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, அரசு மருத்துவ மனைகளில் தினமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இது தவிர, மெகா தடுப்பூசி முகாம்களை, வாரந் தோறும் அரசு நடத்தி வருகிறது.விழிப்புணர்வு அதிகரிப்பால், தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை, 11 மெகா

சென்னை-தமிழகத்தில் 12வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, அரசு மருத்துவ மனைகளில் தினமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



latest tamil news


இது தவிர, மெகா தடுப்பூசி முகாம்களை, வாரந் தோறும் அரசு நடத்தி வருகிறது.விழிப்புணர்வு அதிகரிப்பால், தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை, 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று காலை 7:00 முதல் மாலை 7:00 மணி வரை நடைபெற உள்ளது. தற்போது அரசிடம், 1.24 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.'இன்று நடைபெறும் முகாம்களில், இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்தும், தடுப்பூசி போடாமல் உள்ள 78 லட்சம் பேரும், முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களும், தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.


latest tamil news


சென்னை மாநக ராட்சியில் மட்டும், 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து, https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X