பொது செய்தி

தமிழ்நாடு

‛பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல், விஜய், 'டிவி'யில் ஒளிபரப்பாகும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 5வது சீசன் நடந்து வருகிறது. சமீபத்தில் கொரோனா தொற்றால் கமல்

சென்னை-கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.



latest tamil news


நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல், விஜய், 'டிவி'யில் ஒளிபரப்பாகும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 5வது சீசன் நடந்து வருகிறது. சமீபத்தில் கொரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராகி வருகிறது.

இந்நிலையில், அடுத்த சில வாரங்களுக்கு கமலால் பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்க முடியாது. இதுவரை போட்டியாளர்களேவெளியேறி வந்த நிலையில், முதல்முறையாக கமல் வெளியேற வேண்டியதாகி விட்டது. கமலுக்கு பதிலாக விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் போன்றோர் தொகுத்து வழங்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில், கமல் இடத்தை ரம்யா கிருஷ்ணன் நிரப்பியுள்ளார்.


latest tamil news


தெலுங்கில் சில நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியை, ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 55வது நாளான நேற்று முதல், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க தொடங்கி உள்ளார். கொரோனா தொற்று குணமானதும், அடுத்த சில வாரங்களில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் மீண்டும் இணைவார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
30-நவ-202112:12:12 IST Report Abuse
raja அய்யய்யோ ஆண்டவருக்கு கொரானாவா....கொரானாவுக்கு ஏதாவது வந்துட பொது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X