பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
சென்னை-மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக, பிரிட்டன் பார்லிமென்டில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியனுக்கு, 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டு உள்ளது.உலக தமிழ் நிறுவனம் சார்பில், 'லண்டன் 4வது சர்வதேச மருத்துவ சிறப்பு விருதுகள் - 2021' வழங்கும் நிகழ்ச்சி, பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில்,

சென்னை-மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக, பிரிட்டன் பார்லிமென்டில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியனுக்கு, 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டு உள்ளது.



latest tamil news


உலக தமிழ் நிறுவனம் சார்பில், 'லண்டன் 4வது சர்வதேச மருத்துவ சிறப்பு விருதுகள் - 2021' வழங்கும் நிகழ்ச்சி, பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், அமைச்சர் சுப்பிரமணியனுக்கு, சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காகவும், கொரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காகவும், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


latest tamil news


அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் வெள்ள பாதிப்பு தடுப்பு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், இந்த விருதை, அவரது மகன் டாக்டர் செழியன் மற்றும் குடும்பத்தினர் பெற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
28-நவ-202123:02:02 IST Report Abuse
sankaranarayanan அமைச்சர் சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது என்று ஆளும் கட்சியே தீர்மானித்துவிட்டால் போதுமா? அதை யாரும் வேண்டாம் என்று கூறவில்லை. அந்த துறையில் சென்ற ஆட்சியிலும், தொடர்ந்து இந்த ஆட்சிலும் உயிர் மூச்சாக பாடுபடும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை ஏன் விட்டுவிட்டார்கள் என்றுதான் வேதனைப்பட வேண்டியிருக்கிது. அவர் என்ன பாபம் செய்தார். அவர்மாதிரி ஒருவர் இல்லையென்றால் சென்ற ஆட்சியிலும் சரி இந்த ஆட்சியிலும் சரி கொரானாவை கட்டுப்படுத்தவே முடியாது. அல்லும்பகலும் உழைத்த உழைத்துக்கொண்டிருக்கிற, அவருக்கு ஒரு விருதும் கிடையாதா? ஆனால் அமைச்சருக்கு மட்டும் விருதா? இந்த விஷயத்துக்கு ஜாதிவாரி பார்க்காமல் செயல்பட வேண்டும். இதிலேகூட ஜாதிவெறி பிடித்தக்கூட்டம்தான் செயல் பட்டிருக்கிறது. முக்கியமான எல்லா மக்களுக்கும் அறிமுகமான பேரிடர் துன்பத்தைத்துடைப்பவருமான ஒருவரை ஒதுக்கிவிடக் கூடாது. இது என்ன கட்சி விஷயமா? முதலில் செயலாளருக்கு விருது கொடுத்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு கொடுங்கள். இல்லையேல் அவர் செய்த செயலுக்கு மரியாதையே இல்லை என்றுதான் அர்த்தம்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
28-நவ-202122:52:04 IST Report Abuse
BASKAR TETCHANA லண்டனில் காசு கொடுத்தால் எந்த பட்டமும் வாங்கலாம். இன்னும் இவன் திருந்த மாட்டான். எல்லாவற்றுக்கும் காசு காசு அதனால் தான் இவன் பெயர் மா.சு. .
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
28-நவ-202122:27:27 IST Report Abuse
vnatarajan இந்த விருதை அவர் பெற்றதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலதுறை செயலாளர் திரு டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு, பெரும் பங்கு உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X