பொது செய்தி

தமிழ்நாடு

வார லீவு கண்துடைப்பா: புலம்பித் தள்ளும் போலீசார்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
'போலீசாருக்கு வாரம் ஒருநாள் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை' என, போலீசார் புலம்புகின்றனர்.போலீசாரின் மனஅழுத்தத்தை போக்க வாரம் ஒருநாள் அவர்களுக்கு ஓய்வளிக்க சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. தவிர திருமண நாள், பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சில மாவட்டங்களில் அரசின் உத்தரவு முறையாக

'போலீசாருக்கு வாரம் ஒருநாள் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை' என, போலீசார் புலம்புகின்றனர்.



latest tamil news


போலீசாரின் மனஅழுத்தத்தை போக்க வாரம் ஒருநாள் அவர்களுக்கு ஓய்வளிக்க சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. தவிர திருமண நாள், பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சில மாவட்டங்களில் அரசின் உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறது. அதேசமயம் பெரும்பாலான மாவட்டங்களில் வார ஓய்வு நாளில் ஆள் பற்றாக்குறை, விசாரணை என்ற பெயரில் போலீசார் ஸ்டேஷனிற்கு வரவழைக்கப்படுகின்றனர்.


latest tamil news


அவர்கள் கூறியதாவது: எங்களுக்கு வார ஓய்வு அளித்தது ஸ்டேஷன் ரைட்டர்களுக்கும், சில அதிகாரிகளுக்கும் பிடிக்கவில்லை. அரசின் உத்தரவை காட்டி வரத்தயங்கினால் சம்பந்தப்பட்ட போலீசார் குறி வைக்கப்பட்டு பழிவாங்கப்படுகின்றனர். அரசு உத்தரவு வந்தபின் கூட வார ஓய்வு எடுக்காமல் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். வார ஓய்வு அளிக்கப்படுகிறதா என அதிகாரிகள் கண்காணிக்கவே இல்லை.

ஆனால் வார விடுமுறை அளித்து வருவதாக நீதிமன்றத்திலும், உயர் அதிகாரிகளிடமும் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் பார்வையில் எங்களுக்கு வார விடுமுறை அளித்தது போல் இருந்தாலும், உண்மையில் அது நடைமுறையில் இல்லை. அரசு கண்காணித்து போலீசாரின் மன அழுத்தத்தை போக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
28-நவ-202119:15:24 IST Report Abuse
Barakat Ali ஏதோ ஒப்புக்கு, கண்துடைப்புக்கு முதல்வர் அறிவிச்சா அதையே சீரியஸா எடுத்துக்குறீங்களே ?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-நவ-202118:36:56 IST Report Abuse
DVRR நீங்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள் - இப்படிக்கு மடியல் அரசு உத்தரவு
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
28-நவ-202117:38:04 IST Report Abuse
jagan வசூல் குறையுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X