சட்டத்தின் பாதிப்பை ஆராய்வதில்லை; பார்லி., மீது தலைமை நீதிபதி வருத்தம்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி : ''நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பார்லிமென்ட், சட்டசபைகள் ஆய்வு செய்வதில்லை. நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகளவில் குவிவதற்கு இதுவே முக்கிய காரணம்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம் சாட்டினார். அரசியல் சாசன தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டில்லியில் உச்ச நீதிமன்றம் சார்பில்


புதுடில்லி : ''நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பார்லிமென்ட், சட்டசபைகள் ஆய்வு செய்வதில்லை. நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகளவில் குவிவதற்கு இதுவே முக்கிய காரணம்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம் சாட்டினார்.latest tamil newsஅரசியல் சாசன தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டில்லியில் உச்ச நீதிமன்றம் சார்பில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நேற்று முன்தினம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நேற்று நடந்த நிறைவு விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது: நாடு முழுதும் நீதிமன்றங்களில் கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கி கிடப்பது உண்மை தான்; இதற்கு நீதித்துறை காரண மல்ல; பார்லிமென்டும், சட்டசபையும் தான் காரணம். நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பார்லிமென்டும், சட்டசபையும் சிறிதும் ஆய்வு செய்வதில்லை. இதனால் தான் வழக்குகள் தேங்குகின்றன.

பல புதிய சட்டங்கள் பார்லி.,யில் நிறைவேற்றப்படுகின்றன. ஏற்கனவே பனிச்சுமையால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நீதிபதிகளுக்கு புதிய சட்டங்கள் மேலும் சுமையை அதிகரிக்கின்றன. நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 9,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.


latest tamil news
ஆனால், இந்த நிதியை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சரியாக பயன்படுத்துவதில்லை என்பது வருத்தமான விஷயம்.அதனால் மத்திய அரசு ஒதுக்கிய நிதி பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. அதனால் தான் நீதித்துறை உள்கட்டமைப்புக்கு என தொடர்ச்சி 12ம் பக்கம்தனி ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். நீதித்துறையில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் சட்டத்தை பாதுகாக்க நாம் அயராது உழைத்து வந்தாலும், சமூகத்தில் நன்கு படித்த பலரிடம், இது குறித்த அறிவு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.சட்டங்களை நீதிமன்றங்கள் தான் உருவாக்குவதாக மக்கள் பலரிடமும் தவறான எண்ணம் உள்ளது. அதேபோல் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுவதற்கும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கும் நீதிமன்றங்கள் தான் காரணம் என்ற எண்ணமும் உள்ளது.

நீதிமன்றங்களில் விசாரணை ஒத்தி வைக்கப்படுவதற்கும், வழக்குகள் தாமதமாவதற்கும், நீதிமன்றங்கள் மட்டுமே காரணமில்லை. இந்த விஷயத்தில் நீதித்துறை, அரசு வழக்கறிஞர்கள், எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், பொது மக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.


சட்டங்களை மதிக்க அமைச்சர் வலியுறுத்தல்டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பு ஆகியவை, நம் நாட்டின் சட்டம்; இதை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்.பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்த முடியாத நிலை ஏற்படக் கூடாது; ஏற்படுத்தவும் கூடாது. மக்களில் பலர் தங்கள் உரிமைகளை ஆய்வு செய்யும் போது, மற்றவர்களின் உரிமைகளை மறந்து விடுகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

பார்லி., கவுரவம் ஜனாதிபதி பேச்சு

அரசியல் சாசன தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: எம்.பி.,க்கள், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பார்லி., கவுரவத்தை பாதுகாக்கும் காவலர்களாக செயல்பட வேண்டும்.

ஏனெனில் ஜனநாயகத்தின் கோவிலாக பார்லிமென்ட் உள்ளது.ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான போட்டி, விரோதமாக மாறிவிடக் கூடாது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் சகஜம்; அது, மக்கள் சேவையில் தடையாக மாறிவிடக் கூடாது. எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லையென்றால் ஜனநாயகம் வலுவாக இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natesa -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-202117:10:15 IST Report Abuse
natesa BJP government today killed Indian democracy.
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
28-நவ-202116:27:50 IST Report Abuse
S Bala அறிவுரை கூறுவதுதான் உச்சஅநீதிமன்றத்தின் முதல், முழு வேலை என்று ஆகிவிட்டது. ஏன் அனைத்து நீதிமன்றங்களும் வருடம் 300 நாட்கள் தினமும் 8 மணி நேரம் சுழற்சி முறையில் வேலை செய்யும், எந்த வழக்கிலும் கீழ் நீதிமன்றங்களில் ஆறு மாதத்திலும் மேல் நீதி மன்றங்களில் 3 மாதங்களிலும் தீர்ப்பு அளிக்கப்படும், தீர்ப்புகள் நிறுத்தப்பட்டால் முதலில் தீர்ப்பளித்த நீதிபதி பதவி உயர்வில் அது கணக்கில் கொள்ளப்படும் என்று முடிவு செய்து சீக்கிரம் வழக்குகளை முடிக்க முடியாதா? நீதிபதிக்கு வசதிகள், சலுகைகள், சம்பளம், பென்சன் என்றெல்லாம் பேசுவதோடு நீதிமன்றங்களில் தாங்கள் நுழைய தனி வழி வேண்டும், தங்களை ஆண்டவரே என்று அழைக்க வேண்டும் என்றெல்லாம் பேச தெரிகிறதே, வழக்குகளை சீக்கிரமும் சரியாகவும் முடிக்க ஏன் முடியவில்லை? எடுத்ததற்கெல்லாம் அடுத்தவர்களை குறை சொல்வதே பிழைப்பா?
Rate this:
Cancel
28-நவ-202115:51:34 IST Report Abuse
Srirajan Cbe 0 Qerrty
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X