பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ.5,000 பரிசு!

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை-சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களை ஊக்குவிக்க, பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, உதவி செய்வோரை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், பரிசு வழங்கும்

சென்னை-சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களை ஊக்குவிக்க, பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news


சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, உதவி செய்வோரை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, சாலை விபத்தில் சிக்கியவர்களை, பொன்னான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவசர கால உதவியை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.


latest tamil news


ஒரு ஆண்டில் ஒரு நபருக்கு, அதிகபட்சம் ஐந்து முறை பரிசுத்தொகை வழங்கப்படும். சாலை விபத்து நடந்த பின், காவல் துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டு, விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர்.அனைத்து விபத்துகளையும், மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இயங்கும், மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும். இதில் உதவி செய்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, 5,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்க, போக்குவரத்து துறை கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
magan - london,யுனைடெட் கிங்டம்
28-நவ-202117:11:56 IST Report Abuse
magan Really appreciate
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-நவ-202112:34:22 IST Report Abuse
Ramesh Sargam பரிசை முதல்வர் அல்லது அவர் மகன் அல்லது அவர் குடும்பத்தை சேர்ந்தவர் வழங்கி குடும்பத்துக்கும், கட்சிக்கும் நல்ல பெயர் வாங்கி கொள்வார்கள். ஆனால் இது மத்திய அரசின் திட்டம் என்பதை அவர்கள் முற்றிலும் மறைத்துவிடுவார்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-நவ-202109:31:49 IST Report Abuse
Natarajan Ramanathan இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். இதற்கு மாநில அரசுஸ்டிக்கர் ஒட்டாமல் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X