தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை-'தமிழகத்தின் பல மாவட்டங்களில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடரும்.இன்று, வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி,

சென்னை-'தமிழகத்தின் பல மாவட்டங்களில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.



latest tamil news

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடரும்.இன்று, வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை முதல் மிக கன மழை பெய்யும்.அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை; ஏனைய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.



நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை முதல் மிக கன மழை பெய்யும். தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை; மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நாளை மறுதினம், துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை; மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு, நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன், கன மழை முதல் மிக கன மழை பெய்யலாம்.



ஆவடியில் 20 செ.மீ.,நேற்று காலை ௮:௩௦ மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிக பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 20 செ.மீ., மழை பெய்து உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், செங்கல்பட்டு, செய்யூர் பகுதியில் தலா 18; காஞ்சிபுரம் மாவட்டம் கட்டப்பாக்கத்தில் 17; செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news



எச்சரிக்கை



நாளை, தெற்கு அந்த மான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகரும். இதன் காரணமாக, நாளையும், நாளை மறுதினமும், அந்தமான் கடற்பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும். டிச., 1ல் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசலாம்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

28-நவ-202118:12:59 IST Report Abuse
kulandai kannan இப்போது மட்டும் திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்று நாக்கை சப்பு கொட்டுவார் முதல் மந்திரி ஸ்டாலின்.
Rate this:
Cancel
Samaniyan - Chennai ,இந்தியா
28-நவ-202108:36:55 IST Report Abuse
Samaniyan Our CM will keep inspecting the flooded areas and take photos with an eye on the next election. People will be left to f for themselves. High time central rule is imposed for better management.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X