பொது செய்தி

தமிழ்நாடு

அகத்தியர் யானைகள் காப்பகம் அமைக்கும் பணிகள் துவக்கம்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : அகத்தியர் மலையில், யானைகள் காப்பகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறை துவக்கி உள்ளது.நாடு முழுதும் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை காப்பகமாக அறிவித்து, யானைகள் பாதுகாப்பு நடவடிக்கையை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மேற்கொண்டு வருகிறது.ஆனைமலை'யானைகள் திட்டம்' என்ற பெயரில், இதற்காக மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. அந்த

சென்னை : அகத்தியர் மலையில், யானைகள் காப்பகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறை துவக்கி உள்ளது.



latest tamil news



நாடு முழுதும் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை காப்பகமாக அறிவித்து, யானைகள் பாதுகாப்பு நடவடிக்கையை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மேற்கொண்டு வருகிறது.

ஆனைமலை'யானைகள் திட்டம்' என்ற பெயரில், இதற்காக மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் யானைகள் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்காக, 2017ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில், 2,761 யானைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


latest tamil news



தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டம் நிலாம்பூர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார், கோவை ஆனைமலை ஆகிய இடங்கள் யானைகள் காப்பகமாக அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த இடங்களில், யானைகள் திட்டத்தின் கீழ் நிதி பெறப்பட்டு, சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், புதிய யானைகள் காப்பகம் அமைப்பதற்கான இடங்களை வனத்துறை ஆராய்ந்து வந்தது.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக, அகத்தியர் மலை உயிர் கோள மண்டலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலம், தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில வனப்பகுதிகளையும், கேரளாவில் கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மாவட்டங்களில், சில வனப்பகுதிகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது.

இப்பகுதியில், சமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில், யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், இப்பகுதியை யானைகள் காப்பகமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


பூர்வாங்க பணி



இதற்கு கொள்கை அளவில் அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதை அடுத்து, நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பூர்வாங்க பணிகளை துவக்கி இருக்கிறோம். இதற்கான ஆணைகள் வந்த பின், தமிழகத்தில் இருந்து, இந்த யானைகள் காப்பகத்துக்கு சுற்றுலா பயணியர் வந்து செல்வதற்கும், யானைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-202117:55:15 IST Report Abuse
Vittalanand நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. ஆட்டையை போடுங்கள்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
28-நவ-202116:19:37 IST Report Abuse
Loganathan Kuttuva நீலாம்பூர் கேரளாவில் உள்ள ஊர் .
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
28-நவ-202114:01:54 IST Report Abuse
JeevaKiran இனிமையான செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X