பொது செய்தி

இந்தியா

வருவாய் இழப்பை சரிகட்ட ரயில்களில் "ஏசி' வகுப்புக் கட்டணம் உயர்கிறது?

Added : ஆக 06, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ரயில்வே துறைக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்டும் வகையில், பயணக் கட்டணங்களை மாற்றி அமைக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. "ஏசி' வகுப்புக்கான கட்டணங்களை, கணிசமாக அதிகரிக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) தாக்கல் செய்த அறிக்கையில், ரயில்வே துறையின் நிதி மேலாண்மை,
வருவாய் இழப்பை சரிகட்ட ரயில்களில் "ஏசி' வகுப்புக் கட்டணம் உயர்கிறது?

புதுடில்லி: ரயில்வே துறைக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்டும் வகையில், பயணக் கட்டணங்களை மாற்றி அமைக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. "ஏசி' வகுப்புக்கான கட்டணங்களை, கணிசமாக அதிகரிக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) தாக்கல் செய்த அறிக்கையில், ரயில்வே துறையின் நிதி மேலாண்மை, முறையாக கையாளப்படவில்லை என்று குறை கூறப்பட்டு இருந்தது. குறிப்பாக, ரயில்வே துறையின் நிகர உபரி வருவாய் குறைந்துள்ளது. 2007 - 08ல், 13 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த, நிகர உபரி வருவாய், 2009 - 10ல், 75 லட்ச ரூபாயாக குறைந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன்காரணமாக, எதிர்காலத்தில் ரயில்வே விரிவாக்கப் பணிகளில் பாதிப்பு ஏற்படும், போக்குவரத்து துறையில் ரயில்வேயின் சந்தைப் பங்களிப்பு கணிசமாக குறையும் வாய்ப்புள்ளதாகவும், தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரயில் கட்டணத்தை, கணிசமாக அதிகரிக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அளித்த பேட்டியில்,"ரயில் கட்டணங்களை மாற்றி அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும்' என்றார். இதுகுறித்து, ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: பொதுப் பிரிவு மற்றும் தூங்கும் வசதிக்கான கட்டணம் ஆகியவற்றில் மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. ஆனாலும், "ஏசி' வகுப்புக்கான கட்டணம், கணிசமாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த 1998ல் இருந்து, ரயில் பயணக் கட்டணம், அதிகரிக்கப்படவில்லை. இருந்தாலும், மறைமுகமாக கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. 2001ல் ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ் குமார், பாதுகாப்பு கூடுதல் கட்டணம் என்ற பெயரில், பயணிகளுக்கானக் கட்டணத்தை மறைமுகமாக அதிகரித்தார். அடுத்தபடியாக, லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, "தட்கல்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும், மறைமுகமாக, பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. தற்போது, "ஏசி' வகுப்புகளுக்கானக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம், நிகர உபரி வருவாய் இழப்பை, ஓரளவுக்கு சரிக்கட்ட முடியும் என, ரயில்வே துறை கருதுகிறது. எனினும், இதுகுறித்து பரிசீலித்து தான், முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian - Huizhou,சீனா
07-ஆக-201109:14:12 IST Report Abuse
Subramanian சிவானந்தா சொல்லுவது சரியே. தென் தமிழகத்திற்கு ரயில் பாதை இரட்டிப்பு இன்றும் முடிந்தபாடு இல்லை. இதில் ஏன் இவ்வளவு தாமதம் என்றும் புரியவில்லை. சந்திரமண்டலத்திற்கு கூட போய் விடலாம் ஆனால் இந்த ரயில் பாதை இரட்டிப்பு மற்றும் படு மோசமாக மிகவும் தாமதமாக பல வருடங்களாக நடைபெறுகின்றது. ரயில் பாதை இரட்டிப்பு பணி நிறைவடைந்தால் மேலும் அதிக ரயில் வண்டிகள் விடலாம் - தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இதில் ரயில்வே துறை அக்கறை காட்டுவது இல்லை, மேலும் நம் மாநில அரசும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு முயற்சியும் எடுப்பது இல்லை - ஒரு வேளை தென் தமிழ்நாடு வெளிநாட்டில் உள்ளது போலும் அவர்கள் பார்வையில்.
Rate this:
Cancel
Timothy chelliah - Vellore ,இந்தியா
07-ஆக-201107:54:47 IST Report Abuse
Timothy chelliah Including sleeper and passenger trains fares have to be increased. For eg Vellore - chennai passenger fare is only 21 rupees. The people who travel in these trains pay 50 - 100 rupees for auto to reach station.
Rate this:
Cancel
Sivanandha - Chennai 91,இந்தியா
07-ஆக-201104:11:55 IST Report Abuse
Sivanandha மக்கள் தொகை பெருகி விட்டது ஆனால் ரயில்வே துறை மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் இரயில் வண்டிகளை இயக்குவதில்லை. அட்லீஸ்ட் கூடுதல் இரயில் பெட்டிகளையாவது இணைக்களாம். இரவில் பயணிக்கும் அனைவருக்கும் இடவசதி கிடைக்க தூங்கும் படுக்கை வசதிக்கு பதிலாக சாய்வு நாற்காலிகள் இருப்பது போன்ற ரயில்களை இயக்கினாலாவது முன்பதிவு செய்ய முடியாதவர்கள், முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பயணிக்கலாம். முன்பதிவு செய்யாதவர்கள் இரயில் டிக்கெட்டை வாங்கிகொண்டு பிச்சை காரர்களோடும், டிக்கெட் எடுக்காத பயணிகளோடும், கழிப்பறைகளின் அருகிலும் உட்கார்ந்து கொண்டும் பயணம் செய்யவேண்டி உள்ளது. தினமும் அணைத்து ரயில்களிலும் ஜெனரல் கம்பார்ட்மெண்டில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு இடத்தை பிடிக்கவேண்டி உள்ளது. ஆனால் ரயில்வேதுறை இதை பற்றி கவலை படுவதே இல்லை. நம்மூர் அரசியல் வாதிகளும் இதற்கு குரல் கொடுப்பதும் இல்லை. இரயில்வே துறை தினமும் எவ்வளவு பயணிகள் ஜெனரல் கம்பார்ட்மெண்டில் உட்கார வசதியில்லாமல் நின்றுகொண்டு பயணிக்கிறார்கள் என்று தினமும் அனைதுவண்டிகளிலும் கண்காணித்து அதற்குதகுந்தாற்போல் கூடுதல் பெட்டிகளை இணைக்கலாமே. வயதானவர்கள் குழந்தைகளால் எப்படி ஓடிச்சென்று இடத்தை பிடிக்கமுடியும். எதற்கு இவ்வளவு கஷ்டம். பயனகட்டனத்தை கொடுத்து பயண சீட்டு வாங்கியவர்கெல்லாம் உட்கார இடம் கொடுக்கவேண்டும் மற்றும் அனைவருக்கும் இரயில் பயணம் செய்ய புதிய ரயில்களை ஒரு மணி நேரத்துக்கு ஒரு இரயில் என்று இயக்கினால் தான் அனைவரும் ரயிலில் பயணிக்கமுடியும். இதை ரயில்வே நிர்வாகம் ஒரு சர்வே எடுத்து இந்தியர்கள் அனைவருக்கும் ரயிலில் உட்கார்ந்து பயணம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திகொடுக்க தினமலர் குரல் கொடுத்தால் நிச்சயம் முடியும். டிக்கெட் பரிசோதகர் ஒருவரை ஜெனரல் கம்பார்ட்மெண்டில் அப்போயன்ட் செய்து எவ்வளவு பேர் உட்கார இருக்கை வசதி தேவைப்படும் என்று கூட சர்வே செய்யலாம். அரசுக்கும் வருவாய் இழப்பீடும் இருக்காது. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யவும் முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X