குடியாத்தம்: குடியாத்தம் அருகே, பெங்களூரு செல்லும் ரயில் பிரேக் டவுன் ஆகி நடுவழியில் நின்றதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாட்னாவிலிருந்து, பெங்களூரு செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு, 7:30 மணிக்கு வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மேல்ஆலத்தூர் வந்த போது, ரயில் இன்ஜின் பிரேக் பிடிக்காமல் போனதால், பிரேக் டவுன் ஆகி நடுவழியில் நின்றது. டிரைவர் உடனடியாக கொடுத்த தகவல்படி, சென்னையிலிருந்து கேரளா, பெங்களூரு மார்க்கத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஜோலார்பேட்டையிலிருந்து ரயில்வே பொறியாளர்கள் வந்து, ரயில் இன்ஜினை சரி செய்ய முயன்றனர். முடியாததால், பழுதடைந்த இன்ஜினை தனியாக பிரித்து, வேறு ரயில் இன்ஜினுடன் அந்த பெட்டிகளை இணைத்து அனுப்பி வைத்தனர். இதனால் அனைத்து ரயில்களும் இரண்டு மணி நேரம் தாமதமாக சென்றன. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,' பிரேக் டவுன் ஆன ரயில் இன்ஜினை மீண்டும் இயக்க முடியாது என்பதால், சரக்கு ரயில் பெட்டியில் ஏற்றி ஆவடி பணிமனைக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE