இப்போது இருக்கும் நிலையில், 2026 வரை, அ.தி.மு.க.,வை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே பெரிய வேலை...

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: நாங்கள் 30 ஆண்டுகள் இந்த மாநிலத்தை ஆண்டுள்ளோம். பத்தாண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்துள்ளோம். எங்கள் வெற்றி வரலாறு அனைவரும் அறிந்தது தான். வரும், 2026 தேர்தலில் நாங்கள் தான் வெல்லப் போகிறோம்.இப்போது இருக்கும் நிலையில், 2026 வரை, அ.தி.மு.க.,வை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே பெரிய வேலை. அதில் வெற்றி பெற்றால், நீங்கள் நினைப்பது நடக்க
ஜெயகுமார், இரா.முத்தரசன்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: நாங்கள் 30 ஆண்டுகள் இந்த மாநிலத்தை ஆண்டுள்ளோம். பத்தாண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்துள்ளோம். எங்கள் வெற்றி வரலாறு அனைவரும் அறிந்தது தான். வரும், 2026 தேர்தலில் நாங்கள் தான் வெல்லப் போகிறோம்.


இப்போது இருக்கும் நிலையில், 2026 வரை, அ.தி.மு.க.,வை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே பெரிய வேலை. அதில் வெற்றி பெற்றால், நீங்கள் நினைப்பது நடக்க வாய்ப்பு உள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை
: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கிறிஸ்துவர்கள் பைபிள் கொடுத்து மதப்பிரசாரம் செய்தனர். தகவல் கிடைத்தவுடன் நேரில் சென்று கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் தடுத்து நிறுத்தப்பட்டது.


எப்படியாவது மத மாற்றம் செய்து விட வேண்டும் என சிலர் நினைத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சட்டம் கடுமையாகும் வரை இது தொடரத் தான் செய்யும்!மாநில மார்க்சிஸ்ட் செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: மழையால் அழிந்த பயிர்களுக்கு, ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் தலா, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.


மழை பெய்தாலும் நிவாரணம் கேட்பீர்கள்; வெயில் அடித்தாலும் இழப்பீடு கேட்பீர்கள். உங்களை கூட்டணியில் சேர்த்ததற்கு, தி.மு.க.,வினர் தலையில் அடித்துக் கொள்வர்!புதிய தமிழகம் கட்சித் தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: தற்போது பெரும்பாலான மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன், 5,000 ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும்.


பேய் மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, 5,000 ரூபாய் சற்று நிவாரணம் அளிக்கத் தான் செய்யும். எனினும், அரசு எந்த அறிவிப்பும் வௌியிடவில்லையே!முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவர் நடிகர் கருணாஸ் பேட்டி: வன்னியர் உள்ஒதுக்கீடு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அது நிலைக்காது என்பது அப்போதைய முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நன்கு தெரியும். எனினும், வன்னியர் ஓட்டுக்காக அவர்களை ஏமாற்றி விட்டனர்.


உள்இட ஒதுக்கீடு பெற்ற வன்னியரும் ஓட்டளிக்கவில்லை. பிற பெரிய ஜாதிகளும் ஓட்டளிக்க வில்லை;அதனால் தான், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது என்கின்றனரே!தமிழக முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா பேட்டி: முந்தைய, தி.மு.க., ஆட்சி காலத்தில், அப்போதைய அமைச்சர்கள் செய்த ஊழல்களின் ஆதாரங்களை பிரதமர் மோடி கையில் வைத்துள்ளார். அவர்களில் சிலர் மீது அமலாக்க பிரிவில் வழக்கு உள்ளது. அதனால் தான் நேரடியாக மத்திய அரசை, தி.மு.க., எதிர்ப்பதில்லை.


பிரதமர் மோடிக்கு வேறு வேலை இல்லை பாருங்கள்... இவர்களின் ஊழல் பட்டியலை வைத்து, ஆட்டம் காண்பிக்க போகிறார்...இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன் அறிக்கை: கடந்த ஓராண்டாக, வேளாண் வணிக சட்டங்களை திரும்பப் பெறுவது தவிர வேறு வழியில்லை என்ற நிர்பந்தத்தை உருவாக்கி, மத்திய அரசை பணிய வைத்த ஜனநாயக சக்திகளுக்கு வாழ்த்துக்கள்.


latest tamil news
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, ஓராண்டுக்கும் மேல் போராடியதை அடுத்து, இப்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு எங்கே பணிந்தது... பணிந்திருந்தால், ஒன்றிரண்டு மாதங்களிலேயே அந்த சட்டங்களை வாபஸ் பெற்றிருக்க வேண்டுமே!தமிழக சி.ஐ.டி.யு., தலைவர் அ.சவுந்தரராஜன் அறிக்கை: கார்கில் போரில் கூட உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 500 தான். ஆனால் ஓராண்டாக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில், 700 பேர் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர்.


போராடினீர்கள் சரி. விவசாய சட்டங்களும் வாபஸ் பெற்றாகி விட்டது. இன்னமும் ஏன் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்... கம்யூ.,க்களுக்கு வேறு வேலை இல்லையா?பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: நாம் யாருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என போராடி வருகிறோமோ அவர்களே நீதிமன்றத்திற்கு சென்று, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், தமிழக அரசு மேல் முறையீடு செய்து வழக்கை சரியாக நடத்தி வருகிறது.


அப்போ, உங்கள் கொள்கை, உங்கள் ஜாதிக்காரர்களுக்கே பிடிக்கவில்லை. தமிழக அரசு வேறு வழியின்றி வழக்கு தொடர்ந்து வருகிறதோ!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: மேயர் பதவி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி தலைவர் பதவிக்கான தேர்தல், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நேரடி தேர்தலாக நடத்த வேண்டும்.


உங்களின் கூட்டணியின் தலைமை கட்சியான, தி.மு.க., தலைவர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்த வேண்டும் என்கிறது. எதிர்த்து குரல் கொடுக்கிறீர்களே!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு: கடந்த சட்டசபை தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதுபோல, வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று, சாதனை படைக்க வேண்டும்.


அப்போ, கோவை மாவட்டம் போல, தர்மபுரி மாவட்டமும், மாநில அரசின், 'குட்புக்'கில் இடம் பெற்றிருக்குமே!தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பெ.சண்முகம் அறிக்கை: இந்திய விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கின்றனர். நில உரிமையை தக்க வைத்துக் கொள்ளவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.


ஓராண்டாக போராடுவது விவசாயிகள் அல்ல. நீங்கள் சார்ந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சில பிரிவுகளே. எனவே, உணவு பாதுகாப்பு, நில உரிமை என்பதெல்லாம் சுத்த, 'பேக்கு!'


Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
28-நவ-202121:25:45 IST Report Abuse
Suppan முத்தரசன் அய்யா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜனநாயகத்துக்கு என்ன சம்பந்தம்?
Rate this:
Cancel
Venkat, UAE - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-நவ-202119:01:13 IST Report Abuse
Venkat, UAE விவசாய சட்டங்கள் வாபஸ் ஆனது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியல்ல. விவசாயிகளிடம் இருந்து விவசாய பொருள்களை வாங்கி சந்தையில் விற்கும் விவசாய ப்ரோக்கர்களுக்கு கிடைத்த வெற்றி.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-நவ-202118:11:15 IST Report Abuse
M  Ramachandran ஆ தீ முகா ஒரு விளங்காத கூட்டம். பதவி வெறியில் யார் பெரியவன் என்ற போட்டியால் இரு தலைகளும் ( ஆடுகளும்) மோதிக்கொண்டதில் நரிக்கு கொண்டாட்டம். ரத்தமும் வேண்டிய அளவில் குடித்து தலை கிறுகிறுக்கிறது.
Rate this:
Gopal - Chennai,இந்தியா
28-நவ-202118:58:16 IST Report Abuse
GopalPLEASE DON'T REPEAT THE SAME COMMENT...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X