சென்னை : 'பொது வினியோக திட்டத்தின் நோக்கத்தை, சீர்குலைக்கும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டால், அதை கடுமையாக எதிர்ப்போம்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை: வருமான வரி செலுத்துவோரின் விபரங்களை, அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்கும்படி, வருமான வரித்துறையிடம் உணவுத் துறை கேட்டுள்ளது. வஞ்சிக்கும் செயல்இது, அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தை சீர்குலைப்பதாகும்; இது, ஓட்டளித்த மக்களை வஞ்சிக்கும் செயல்.
பயனாளிகளை குறைக்க, வருமான வரி விபரங்களை, தமிழக அரசின் உணவுத் துறை கேட்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வசதி படைத்தவர்கள், நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்கவில்லை என்றாலும், அந்த உரிமையை விட்டுத்தர மறுக்கின்றனர்.
![]()
|
இதன் காரணமாக முறைகேடு தொடர்கிறது. இதை தடுக்கவே, வருமான வரித்துறை செலுத்துபவர் விபரங்களை, ஆதார் எண்ணுடன் வழங்கும்படி கேட்டுள்ளதாக கூறியுள்ளனர். நியாய விலை கடைகளில், முறைகேடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில், யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதே சமயம் வருமானம் அடிப்படையில், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து, அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பதை ஏற்க முடியாது.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு, பணி பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இவர்கள் வருமான வரி செலுத்துகின்றனர் என்பதை அடிப்படையாக வைத்து, அவர்களை வசதி படைத்தவர்களாக கருத முடியாது.ஆட்சேபனை இல்லைதமிழக அரசின் நடவடிக்கையை பார்த்தால், அனைவருக்குமான பொது வினியோக திட்டம் என்ற இலக்கில் இருந்து, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இலக்கு சார்ந்த பொது வினியோக திட்டத்திற்கு மாறுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது.
பொதுவான வேண்டுகோள் அடிப்படையில், வசதி படைத்தவர்கள், தாமாக ரேஷன் பொருட்களை விட்டுத்தர முன் வந்தால், அதில் யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. அதே சமயம், வருமானம் அடிப்படையில், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து, அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டால், அதை அ.தி.மு.க., கடுமையாக எதிர்க்கும்.
எனவே, முதல்வர் இதில் கவனம் செலுத்தி, வருமானம் அடிப்படையில் பயனாளிகள் எண்ணிக்கையை குறைத்து, இலக்கு சார்ந்த பொது வினியோக திட்டமாக மாற்றும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement