சிறையிலிருந்து வெளி வருவதற்காக நீதிமன்றத்தில் கோல்கட்டா மாநகர தந்தையாக (மேயராக) வாதாடினார். கோர்ட்டில் வாதாடக் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார் நேதாஜி.
கோல்கட்டாவின் சிறைகளில் கைதிகள் எவ்வாறு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று நீதிபதியிடம் நிலைமையை விளக்கினார். கோல்கட்டாவின் சிறைகளில் கைதிகளுக்கு இருந்த பாதுகாப்பற்ற நிலைமையை விளக்கினார்.
மீண்டும் ஆறு வாரங்கள் சிறை தண்டனை பெற்றார். சிறை தண்டனையின் போது காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு பத்து மாதகாலம் சுதந்திரமாக செயல்பட்டார்.
1931ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர் அல்லவா? காந்தி நினைத்திருந்தால் அவர்களை காப்பாற்றி இருக்க முடியும். அந்த அளவிற்கு காந்திக்கு செல்வாக்கு இருந்தது. ஆனால் வேண்டுமென்றே அவர் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார் என்ற எண்ணம் பல தலைவர்கள் தோன்றியது. நேதாஜிக்கும் காந்தியக் கொள்கைகளில் வெறுப்பு ஏற்படத் தொடங்கியது.
(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநிலச் செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE