பொது செய்தி

இந்தியா

300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் - பாம்பை கையில் பிடித்தவாறே மரணம்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
யாதகிரி: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தின் கோடிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி. பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தின் ஒரு வீட்டில் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்ததை கிராம மக்கள்

யாதகிரி: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தின் கோடிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி. பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுள்ளார்.



latest tamil news



இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தின் ஒரு வீட்டில் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்ததை கிராம மக்கள் பசவராஜிடம் தெரிவித்துள்ளனர். மது போதையில் இருந்த அவர் வழக்கம்போல லாவகமாக பாம்பை பிடித்தாலும் அதை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விடுவதில் அலட்சியம் காட்டியுள்ளார்.


latest tamil news



பாம்பை பையில் அடைக்காமல் கையிலே அவர் தூக்கிச்சென்றபோது சுமார் 5 முறை பாம்பு அவரை கடித்ததாக தெரிகிறது. இதனால் விஷம் தலைக்கேறிய நிலையில், அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பாம்பை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டவாறே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
28-நவ-202110:20:02 IST Report Abuse
தியாகு 300க்கும் மேற்பட்ட பாம்பை பிடித்தவர் பாம்பினால் மரணம். 300க்கும் மேற்பட்ட ஊழல்கள் செய்து சொத்து சேர்த்த திருட்டு திமுக எந்த தண்டனையும் இன்றி சுகபோகமாய் வாழ்கிறது. இதன் பெயர்தான் கலிகாலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X