300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தவர் பாம்பு கடித்து மரணம்

Updated : நவ 28, 2021 | Added : நவ 28, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் பாம்புகள் பிடிப்பதில் கைதேர்ந்தவரான ஒருவர் பாம்பை பிடித்து எடுத்துச் செல்லும் போது பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தின் கோடிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி. பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக
Karnataka, person catches, More than 300 Snakes, Dies After, கர்நாடகா, 300 பாம்புகள் பிடித்தவர், பாம்பு கடித்து மரணம்,

பெங்களூரு: கர்நாடகாவில் பாம்புகள் பிடிப்பதில் கைதேர்ந்தவரான ஒருவர் பாம்பை பிடித்து எடுத்துச் செல்லும் போது பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தின் கோடிஹாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் பூஜாரி. பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.


latest tamil newsஇந்நிலையில் அந்த கிராமத்தின் ஒரு வீட்டில் சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்ததை கிராம மக்கள் பசவராஜிடம் தெரிவித்துள்ளனர். மது போதையில் இருந்த அவர் வழக்கம்போல லாவகமாக பாம்பை பிடித்தாலும் அதை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விடுவதில் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.

பாம்பை பையில் அடைக்காமல் கையாலேயே அவர் தூக்கிச்சென்றபோது சுமார் 5 முறை பாம்பு அவரை கடித்ததாக தெரிகிறது. இதனால் விஷம் தலைக்கேறிய நிலையில், அவர் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பாம்பை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டவாறே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
30-நவ-202100:22:08 IST Report Abuse
DARMHAR பாம்போடு பழகேல் இது ஆத்திச்சூடி அல்ல அறிவுச்சூடி.
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
28-நவ-202118:23:51 IST Report Abuse
Balasubramanian "அரவம் ஆட்டேல்" என்று சும்மாவா சொன்னாங்க ஔவை பாட்டி.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
28-நவ-202115:07:00 IST Report Abuse
Ram thiravida katchigaluku sarakku moolyamagathan varuvai varugirathu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X